WTC Final India vs New Zealand | வேறு மைதானம் என்றால் இந்நேரம் நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன் - அடங்காத மைக்கேல் வான்

மைக்கேல் வான்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எப்போது பார்த்தாலும் சினிமாவில் வரும் ஹீரோ போல் விராட் கோலி முகத்தையே ஒளிபரப்பாளர்கள் காட்டிக் கொண்டிருப்பது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போலும்.

  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எப்போது பார்த்தாலும் சினிமாவில் வரும் ஹீரோ போல் விராட் கோலி முகத்தையே ஒளிபரப்பாளர்கள் காட்டிக் கொண்டிருப்பது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போலும் குறிப்பாக மைக்கேல் வானுக்கு எரிச்சல் ஏற்கெனவே அதிகம் இருந்து வரும் நிலையில் மீண்டும் இந்திய ரசிகர்களை சீண்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    சவுத்தாம்ப்டனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மோசமான வானிலை, மழை, காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு 5ம் நாள் முடிவில் இரு அணிகளும் ஒரு இன்னிங்ஸையே முடித்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது, ஒரு முக்கியமான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இப்படி சொதப்பலாக முடிவடைவதில் பலருக்கும் ஏமாற்றம் என்பதை மறுப்பதற்கில்லை.

    இந்நிலையில் விராட் கோலி தலைமை இந்திய அணியை தொடர்ந்து மட்டம் தட்டி வரும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மீண்டும் ஒரு மோசமான கருத்தைக் கூறி சீண்டியுள்ளார்.

    இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சவுத்தாம்ப்டனில் நடக்காமல் நார்த்தில் நடந்திருந்தால் இந்தியா மண்ணைக்கவ்வி நியூசிலாந்து இந்நேரம் உலக டெஸ்ட் சாம்பியன்களாகியிருப்பார்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

    மைக்கேல் வானின் ட்வீட்டும் அவருக்கு நெட்டிசன்கள் கொடுத்த பதிலடியும் இதோ:






    பலரும் மைக்கேல் வானை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    நியூசிலாந்து கூட உலக சாம்பியனாகியிருக்கும் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை இறுதியில் நடுவர்கள் மோசடி நடைபெறவில்லை எனில் என்று ஒரு டிவிட்டர் வாசி பதிலடி கொடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்னும் ஒரு நெட்டிசன் எப்போதும் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் நான் காணவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

    ஏற்கெனவே இயற்கை வான் வெறுப்பேற்ற இந்த மைக்கேல் வான் வேறு வெறுப்பேற்றி வருகிறார்.
    Published by:Muthukumar
    First published: