WTC Final IND vs NZ | இந்திய பேட்ஸ்மென்களுக்கு காத்திருக்கும் வேதனை: பைனலில் பந்துகள் வேகத்துடன் எழும்பும் ஆடுகளம்

ஜடேஜா.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • Share this:
  இந்திய அணி தங்களுக்குள்ளேயே அணி பிரித்து டெஸ்ட் போட்டி போல் பயிற்சியில் ஈடுபட்டது, இதில் ரிஷப் பந்த் பிரமாதமாக ஆடியதாக பிசிசிஐ டிவி வீடியோ வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவுக்கு வந்தால் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் குழிப்பிட்சைப் போட்டு அஸ்வின், ஜடேஜா, புதிய குழிப்பிட்ச் ஸ்பெஷலிஸ்ட் அக்சர் படேலை வைத்து மிரட்டும் இந்திய அணிக்கு இப்போதெல்லாம் வெளியே அதிவேக பிட்ச்களைப் போட ஏனோ அன்னிய நாடுகள் தயங்குகின்றன, காரணம், இந்திய பவுலர்கள். ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ் உள்ளிட்டோர்களே.

  கோலி-வில்லியம்சன்.


  இந்நிலையில் இந்த முறை சவுத்தாம்ப்டனில் கிரீன் டாப் பிட்ச், அதாவது வேகப்பந்துச் சாதக ஆட்டக்களமாக, பந்துகள் வேகமாக வருவதோடு, பிட்ச் ஆகி நன்றாக எழும்புமாறு பிட்ச் அமைக்கப்படவுள்ளது.

  ALSO READ-  ICC Test Ranking: டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முந்தி நியூசிலாந்து மீண்டும் முதலிடம்!

  பிட்ச் தயாரிப்பாளர் சைமன் லீ, வேகம்தான் போட்டிக்கு கூடுதல் விறுவிறுப்பைத் தரும் என்கிறார்.ஆனாலும் பேட்டிங் திறமையுள்ளவர்கள் சிறப்பாக ஆட முடியும்.

  “ஏஜியஸ் பவுலில் உலக சாம்பியன்ஷிப் பைனல் நடப்பது அருமை. இதற்கான பிட்ச் அமைக்கும் பணி எனக்குக் கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். நான் பிட்சில் பந்துகள் வேகமாக, எழும்பி வருமாறு களம் அமைப்பேன். இங்கிலாந்தில் பொதுவாக இப்படிச் செய்ய முடியாது, ஏனெனில் வானிலை அப்படி, ஆனால் இந்த முறை வெயில் அடிப்பதால் நல்ல வேகப்பந்து வீச்சு ஆட்டக்களத்தை அமைக்க உத்தேசித்துள்ளேன், ஓவராக பிட்சை ரோல் செய்து அதைக் கொல்வதில் விருப்பமில்லை.

  நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். எனவே அருமையான பேட்டிங், நல்ல பவுலிங் இரண்டுக்குமே வாய்ப்பளிக்கும் பிட்ச்தான் அமைப்பேன். பேட்ஸ்மெனும் பவுலரும் திறமை வாய்ந்தவர்கள் என்றால் ஒரு மெய்டன் ஓவர் கூட த்ரில்லாகவே இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வெறுமனே ஸ்விங் மட்டுமே ஆகி ஒரு தலைபட்சமாக இருப்பதை விட வேகம், எழுச்சி இருந்தால் இருதரப்புக்கும் நல்லது. 4வது வேகப்பந்து வீச்சாளரை அணியில் வைத்தால் டெய்ல் எண்டர்கள் வரிசை நீளமாகி விடும், எனவே அணி சேர்க்கையை கவனமாக மேற்கொள்வது அவசியம்” என்கிறார் பிட்ச் தயாரிப்பாளர் சைமன் லீ.

  Also Read: England vs New Zealand: இங்கிலாந்து கதை 4ம் நாளில் முடிந்தது: 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து

  ஆஸ்திரேலியாவில் இந்தியா தொடரை வென்ற போது அடிலெய்டில் 36 ஆல் அவுட் ஆன பிறகு இந்திய அணி தொடரை வென்றாலும் பிட்சின் தரம் 80களில் 90களில் ஆஸ்திரேலிய பிட்ச் தரத்த்திற்கு இல்லாமல் இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்ததையும் கவனிக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலவீனமடைந்ததும் காரணம்.

  உண்மையான பிட்சில் ஆடி வெற்றி பெற்றால் அது தரும் சுகமே அலாதிதான். 2007-ல் திராவிட் தலைமையில் இந்தியா அங்கு வென்றது, அதே போல் 1986-ல் கபில் போய் 2-0 என்று இங்கிலாந்து அணிக்கு உதை கொடுத்தது, பிறகு கங்குலி தலைமையில் 1-1 என்று டிரா செய்ததெல்லாம் பெரிய சாதனைகள்தான்.
  Published by:Muthukumar
  First published: