• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • World Champion New Zealand | சாதனைக்குத் தகுதியான அணி நியூசிலாந்துதான், கேன் வில்லியம்சனுக்கு மனமார்ந்த வாழ்த்து- விராட் கோலி பாராட்டு

World Champion New Zealand | சாதனைக்குத் தகுதியான அணி நியூசிலாந்துதான், கேன் வில்லியம்சனுக்கு மனமார்ந்த வாழ்த்து- விராட் கோலி பாராட்டு

உலக சாம்பியன் நியூசிலாந்து.

உலக சாம்பியன் நியூசிலாந்து.

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 3 நாட்களில் வென்ற நியூசிலாந்து முதல் உலக சாம்பியன் என்ற சாதனை படைத்தது.

  • Share this:
    இந்திய அணியை 2வது இன்னிங்சில் 170 ரன்களுக்குச் சுருட்டி, பிறகு வெற்றி இலக்கான 139 ரன்களை எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் விரட்டி கேன் வில்லியம்சன் 52 நாட் அவுட், ராஸ் டெய்லர் 47 நாட் அவுட் என 140/2 என்று அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து.

    மைக்கேல் வான் சொன்னது உண்மையானது, தூங்கும் நாய் படத்தை வெளியிட்டு கேன் வில்லியம்சன் பேட்டிங்கை கேலி செய்த சேவாக் மண்ணைக் கவ்வினார். தொடக்கத்திலிருந்தே இந்த இறுதிப் போட்டியை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இன்னொரு போட்டி, என்றும் கடந்த கால சாதனையைப் பேசி பழம்பெருமைக் கொண்டாடி ஆட்டத்தில் கோட்டை விட்டதுதான் தோல்விக்குக் காரணம்.

    இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் ஸ்டார் ஸ்போர்ட்சுக்கு விராட் கோலி கூறியதாவது:

    முதலில் கேன் வில்லியம்சனுக்கும் நியூசிலாந்து அணிக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள். பெரிய சீரான தன்மையையும் ஆட்டத்தை வெல்வதற்கான இருதயமும் அவர்களிடமும் இருந்தது. அதனால் 3 நாட்களில் வென்றனர். வெற்றி பெற தகுதியான அணி நியூசிலாந்துதான்.

    Also Read:

    WTC Final India vs New Zealand |முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சாதனைப் படைத்த நியூசிலாந்து 

    Also Read: Dhoni | ஹாட்ரிக் ஐசிசி கோப்பைகள் வென்ற சாதனை கேப்டன் தோனிக்கு ஐசிசி பாராட்டு

    தங்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கினால் நம்மை தொடர்ந்த் நெருக்கடியில் வைத்திருந்தார்கள். முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது, இரண்டாம் நாள் தொடங்கும்போது உத்வேகம் இல்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    3 விக்கெட்டுகளைதான் இழந்திருந்தோம் இடையூறுகள் இல்லாமல் ஆட்டம் நடந்திருந்தால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருப்போம். 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி தங்கள் திட்டத்தை துல்லியமாகச் செயல்படுத்தினர், 30-40 ரன்கள் குறைவாகப் பெற்றோம்.

    4 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொள்ள ஒருவர் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும். பல்வேறு சூழ்நிலைகளில் இந்த அணியை கொண்டுதான் ஆடியிருக்கிறோம், வென்றிருக்கிறோம். இதுதான் நம் சிறந்த அணி சேர்க்கை என்று கருதினோம். பேட்டிங்கிலும் ஆழம் இருந்தது, இன்னும் கொஞ்சம் ஆட்ட நேரம் கிடைத்திருந்தால் ஸ்பின் பவுலிங் எடுத்திருக்கும்.

    ஜேமிசன் ஒரு தரமான வீரர், நல்ல இடங்களில் அவர் பந்துகளை பிட்ச் செய்து ஸ்விங் செய்தார், தைரியமான பேட்ஸ்மெனும் கூட. அவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கிடைக்க வேண்டும், அவர் அதற்கு தகுதியானவர்தான்.

    இந்த டெஸ்ட் போட்டி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிக நல்லது. டெஸ்ட் வடிவம்தான் கிரிக்கெட்டின் உயிர்மூச்சு. இங்கிலாந்துக்கு எதிராக நீளமான தொடரை எதிர் நோக்குகிறோம். சிறப்பான ஒன்றைச் செய்ய நம்மிடம் தரமான அணி உள்ளது.

    இவ்வாறு கூறினார் விராட் கோலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: