Sachin Tendulkar: முதல் 10 ஓவர் முக்கியம் என்றேன், 10 பந்துகளில் கோலி, புஜாரா காலி: சச்சின் டெண்டுல்கர் விமர்சனம்

கோலி-சச்சின்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 6ம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி, புஜாரா இருவரையும் தொடக்கத்தில் இழந்ததே இந்தியாவின் படுதோல்விக்குக் காரணம் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    64/2 என்று களமிறங்கிய இந்திய அணி நிதானித்து பிறகு அட்டாக் செய்யாமல் இறங்கியவுடனேயே தப்பும் தவறுமாக ஆடி அதை பாசிட்டிவ் அணுகுமுறை என்று மாய்மாலம் செய்யத் தொடங்கிவிட்டது, ஒரு நம்பர் 1 வீரர் கோலி, அவரை சுலபமாக 4 அவுட்ஸ்விங்கர் பிறகு ஒரு இன்ஸ்விங்கர், அல்லது 4 இன்ஸ்விங்கர் பிறகு ஒரு அவுட் ஸ்விங்கர் அல்லது ஒரு ஷார்ட் பிட்ச் பந்து என்று போட்டு எடுக்கும் பேட்ஸ்மெனாக இருக்கிறார், சச்சின், லாரா, பாண்டிங், காலிஸையெல்லாம் இப்படி ஒர்க் அவுட் செய்ய முடியாது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இவர்தான் நம்பர் 1. இவரை விமர்சிப்பவர்களை ட்ரால் செய்கிறேன் பேர்வழி என்று அச்சுப்பிச்சு பதிவுகளை நம் சமூக ஊடக ‘போராளிகள்’ பதிவிடுவதும் வழக்கமாகி வருகிறது.

    இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மிகத் துல்லியமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கோட்டை விட்டதற்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.

    அவர் கூறியதாவது:

    பிளாக் கேப்ஸ் (நியூசிலாந்து) அணிக்கு வாழ்த்துக்கள், நீங்கள்தான் சூப்பர் டீம். டீம் இந்தியா தன் ஆட்டத்தில் ஏமாற்றமடைந்திருக்கும்.

    நான் ஏற்கெனவே கூறியது போல் முதல் 10 ஓவர்கள் முக்கியம் என்றேன். ஆனால் 10 பந்துகள் இடைவெளியில் கோலி, புஜாரா இருவரையும் இழந்தோம். இதுதான் அணி மீதான அழுத்தத்தை அதிகரித்தது., என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

    இவர் கூறுவதுதான் உண்மையான காரணம் இதை விராட் கோலி கூறாமல் பாசிட்டிவாக ஆட வேண்டும் என்று பிரச்சினையை திசைத்திருப்பி அணியின் மற்ற வீரர்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாறாக நியூசிலாந்து இந்தியாவை விட சிறப்பாக ஆடியது என்பதை பல முன்னாள் வீரர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

    விவிஎஸ் லஷ்மண் தன் கருத்தைக் கூறுகையில், “சாம்பியன்களாக தகுதி உடைய அணி நீங்கள்தான் பிளாக் கேப்ஸ், நியூசிலாந்து பவுலர்கள் பயங்கரம். டெய்லரும் வில்லியம்சனும் அனுபவத்தைக் கொண்டு வெற்றியை எளிதாக்கினர். இந்திய பேட்ஸ்மென்கள் தங்கள் திறமைக்கேற்ப ஆடாததை நினைத்து வருந்துவார்கள். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சிறப்பாக ஆடியது” என்றார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆர்த்தர்டன் மிகச்சரியாக, “எளிமையான கடினமாக உழைக்கும் அவுட்ஸ்டேண்டிங் டெஸ்ட் டீம். தகுதியான உலக சாம்பியன்கள்” என்று எளிமையான என்ற வார்த்தையை மிகத்துல்லியமாக பயன்படுத்தியுள்ளார். அதாவது ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அணி மாறாக இந்திய அணி மிகுந்த ஆர்ப்பாட்டம் கொண்டது.
    Published by:Muthukumar
    First published: