WTC Final: மேட்ச் பிராக்டிஸ் இல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற டாப் வீரர்களுக்கே கஷ்டம் தான்: திலிப் வெங்சர்க்கார்

விராட் கோலி

பேட்ஸ்மென், பவுலர்கள் இருவருக்குமே உண்மையான ஆட்டச் சூழல் தேவைப்படும். மேட்ச் பிராக்டிஸ் உடனடித் தேவை. வலைப்பயிற்சி உதவினாலும் உண்மையான மேட்ச் சூழல் வேறு என்கிறார் திலிப் வெங்சர்க்கார்.

  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக மேட்ச் பிராக்டீஸ் இல்லாமல் நேரடியாக பைனலில் களமிறங்குவது என்பது விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற டாப், அனுபவ வீரர்களுக்கே கடினமானது என்கிறார் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார்.

    கோலி படை இங்கிலாந்து சென்றடைந்து 3 நாட்கள் தனிமைக்குப் பிறகு பயிற்சியை தொடங்கினர். ஜூன் 18ம் தேதி பைனலுக்காக உலகக்கோப்பை பைனல் போல் இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் காத்திருக்கின்றனர்.

    கோலி, ரோகித் சர்மா நல்ல பார்மில் இருக்கலாம் ஆனால் பயிற்சி ஆட்டமோ, சவாலான ஆட்டமோ எதுவும் இல்லாமல் நேரடியாக இறங்குவது கொஞ்சம் இருவருக்குமே பிரச்னைதான் என்கிறார் 116 டெஸ்ட்களை ஆடியவும் இந்திய முன்னாள் கேப்டனுமான ‘கர்னல்’ திலிப் வெங்சர்க்கார்.

    Also Read: Ravichandran Ashwin: எல்லா காலத்திலும் சிறந்த வீரராக அஸ்வினை ஏற்க முடியாததற்கு இது தான் காரணம் - சஞ்சய் மஞ்சரேக்கர்!

    பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறியதாவது:

    கோலி நீண்ட காலமாக அணியில் இருக்கிறார், இப்போது உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். தங்கள் ஆட்டத்தின் மீது ஏகப்பட்ட பெருமை கொள்பவர்கள். போட்டியை வெல்வதில் பெருமை அடைபவர்கள்.

    இருவரும் நல்ல பார்மில் இருப்பது இந்தியாவுக்கு நல்லது, ஆனால் இதைக் கூறும்போதே மேட்ச் பிராக்டிஸ் இல்லாததும் அவர்களுக்கு ஒரு குறைபாடுதான்.

    இந்திய அணி நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பார்மில் இருந்தாலும் மேட்ச் பிராக்டிஸ் என்ற விதத்தில் கேன் வில்லியம்சனின் நியூசிலாந்து சந்தர்ப்பம் வாய்க்கப்பட்டு சாதக நிலையில் உள்ளது. ஏனெனில் இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அவர்கள் நல்ல தயாரிப்பில் இருப்பார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அங்கு இருக்கும் சூழ்நிலைமைகளுக்கு அவர்கள் நன்றாகத் தங்களை தகவமைத்துக் கொள்வார்கள். டெஸ்ட் மேட்சுக்கு முன்னால் இந்தியா ஒன்றிரண்டு போட்டிகளில் ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    பேட்ஸ்மென், பவுலர்கள் இருவருக்குமே உண்மையான ஆட்டச் சூழல் தேவைப்படும். மேட்ச் பிராக்டிஸ் உடனடித் தேவை. வலைப்பயிற்சி உதவினாலும் உண்மையான மேட்ச் சூழல் வேறு.

    இவ்வாறு கூறினார் திலிப் வெங்சர்க்கார்.
    Published by:Muthukumar
    First published: