WTC Final India vs New Zealand: கவாஸ்கர் உங்கள் ஆசைக்கு அளவே இல்லையா?

சுனில் கவாஸ்கர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் சவுத்தாம்ப்டனில் 6ம் நாளை ஆவலுடன் ரசிகர்களை எதிர்பார்க்கத் தூண்டியுள்ளது, இன்றைய தினத்தில் இருப்பது மொத்தம் 98 ஓவர்கள்தான். சூழ்நிலை பவுலிங்குக்குச் சாதகமாக உள்ளது. இந்நிலையில் சுனில் கவாஸ்கரின் எதிர்பார்ப்புக்கு ஒரு அளவே இல்லாமல் தன் கருத்தை இந்தியாவுக்குச் சாதகமாகக் கூறியுள்ளார்.

  • Share this:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் சவுத்தாம்ப்டனில் 6ம் நாளை ஆவலுடன் ரசிகர்களை எதிர்பார்க்கத் தூண்டியுள்ளது, இன்றைய தினத்தில் இருப்பது மொத்தம் 98 ஓவர்கள்தான். சூழ்நிலை பவுலிங்குக்குச் சாதகமாக உள்ளது. இந்நிலையில் சுனில் கவாஸ்கரின் எதிர்பார்ப்புக்கு ஒரு அளவே இல்லாமல் தன் கருத்தை இந்தியாவுக்குச் சாதகமாகக் கூறியுள்ளார்.

முதலில் 32 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது, முதலில் இந்தியா 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அதுவும் புஜாராவை வைத்துக் கொண்டு விரைவில் ரன்கள் குவிக்க வேண்டும் என்றால் நியூசிலாந்திடம் சொல்லி விரைவில் புஜாராவை பெவிலியன் அனுப்பச் சொல்ல வேண்டியதுதான்.

Also Read: WTC Final | கேன் வில்லியம்சனின் மெதுவான பேட்டிங்கை விமர்சித்து நாய் வீடியோவை பகிர்ந்த சேவாக்

ஆனால் இறுதி நாளான இன்று இந்தியா எப்படி ஆடும் என்பதை வெளியிட்ட சுனில் கவாஸ்கர் தனியார் ஊடகத்துக்கு கூறும்போது, “இந்தியா சுதந்திரமாக ஆடி விரைவில் ரன்கள் குவித்து நியூசிலாந்தை ஆல் அவுட் செய்ய முயற்சி செய்வார்கள். முதல் உலக டெஸ்ட் பைனல் விறுவிறுப்பான முடிவை நோக்கியுள்ளது.

இந்திய அணி ஒரு வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ளது. இப்போது பிட்ச் கொஞ்சம் பரவாயில்லை. வானிலையும் மாறிவிட்டது. சூரிய ஒளி பிட்சை கொஞ்சம் வறளச் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிட்சில் கொஞ்சம் புற்கள் இருந்தாலும் பெரிய அளவில் அதில் பந்துகள் பவுன்ஸ் ஆகாது. ஆகவே பேட்டிங் சுலபமாக இருக்கும், ஆனால் இந்தியா வெல்ல வேண்டுமெனில் நியூசிலாந்தை ஆல் அவுட் செய்ய வேண்டுமெனில் தனித்துவமான முறையில் சிறப்பாக வீச வேண்டும்” என்றார் சுனில் கவாஸ்கர்.

பிட்ச் எளிதாகி விடும் என்றால் நியூசிலாந்துக்கும் பேட்டிங் எளிதாகத்தானே இருக்கும், பின் எப்படி இந்திய வெற்றி வாய்ப்பு சாத்தியமாகும். ஆசைக்கும் அளவுண்டு சுனில் கவாஸ்கர்.

Also Read: India vs New Zealand WTC Final: கேன் வில்லியம்சனின் தடுப்பாட்ட மாஸ்டர் கிளாஸ், ஷமி அட்டகாசம்- சுவாரசியமான கட்டத்தில் பைனல்

இந்தியா இன்று 64/2 என்று தொடங்குகிறது, இன்னும் கைல் ஜேமிசனை ஆட முடியவில்லை, 10 ஓவர்களில் 15 ரன்கள்தான் கொடுத்துள்ளார். முதல் இன்னிங்சில் 22 ஓவர்களில் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், அவரை ஓவருக்கு 2 ரன்கள் கூட அடிக்க முடியாத அளவுக்கு உலகின் நம்பர் 1 பேட்ஸ்மென்களெல்லாம் நம் அணியில் இருக்கும்போது கவாஸ்கரின் ஆசைக்கு எல்லையே இல்லை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

மேலும் ஒரு நடுநிலை வர்ணனையாளராக சூழ்நிலைமைகளை அவர் விவாதிக்க வேண்டுமே தவிர தன் ஆசையையே முடிவாக கூறக் கூடாது என்பது வர்ணனையின் குறைந்தபட்ச விவேகமாகும்.
Published by:Muthukumar
First published: