IND vs NZ WTC Final Southampton 6th day | கோலி, புஜாரா இருவரும் காலி; ஜேமிசன் அபாரம்: தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?

விராட் கோலி 13 அவுட். |சவுத்தாம்ப்டன்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 6ம், இறுதி நாளான இன்று இந்திய அணி சற்று முன் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா  விக்கெட்டுகளை ஜேமிசனிடம்  இழந்தது. கைல் ஜேமிசன் இந்த இன்னிங்சிலும் கோலியைக் காலி செய்தார்.

  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 6ம், இறுதி நாளான இன்று இந்திய அணி சற்று முன் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா  விக்கெட்டுகளை ஜேமிசனிடம்  இழந்தது. கைல் ஜேமிசன் இந்த இன்னிங்சிலும் கோலியைக் காலி செய்தார்.

    இந்தியா தற்போது 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது, ரகானே, ரிஷப் பந்த் தலையில் பெரிய பொறுப்புச் சுமை விழுந்துள்ளது.

    இன்று 32 ரன்கள் முன்னிலையுடன் 64/2 என்று இந்திய அணி தொடங்கியது, விராட் கோலி மிட்விக்கெட்டில் ஒரு பிளிக் 3 ரன்களையும் பிறகு பாயிண்டில் தட்டி விட்டு ஒரு 3 ரன்களையும் எடுத்து 13 ரன்கள் எடுத்து ஆடிவந்தார்.

    ஆனால் இந்த இரண்டு 3 ரன்களுக்குப் பிறகு ஜேமிசன் வீசிய 12வது ஓவரில் கோலி தடவு தடவென்று தடவினார். ஒரு பந்து சற்றே நின்று ஸ்விங் ஆக மட்டையை கொண்டு நோண்டப்பார்த்து பீட்டன் ஆனார், மீண்டும் இதே ஓவரின் அடுத்த பந்தையே காலை நகர்த்தாமல் நோண்டினார் பீட்டன் ஆனார், இரு பந்துகளும் அருமை.

    மீண்டும் 13வது ஓவரை வீச கோலியின் ஆர்சிபி சகா கைல் ஜேமிசன் வந்தார், ஆனால் முதல் பந்திலேயே இன்ஸ்விங்கரை வலது காலில் வாங்கினார் கோலி, மேலே எழும்பும் பந்தாகையினால் எல்.பி. அப்பீலை நடுவர் மறுத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதெ ஓவரின் கடைசி பந்தை சற்றே அடித்து வீசினார் ஜேமிசன் பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் எழும்பியது கோலியும் எழும்பி மட்டையைக் கொண்டு போய் நோண்டினார், எட்ஜ் ஆனது வாட்லிங்கிடம் கேட்ச் ஆனது, இந்த டெஸ்ட் போட்டியில் இருமுறை கோலி ஜேமிசனிடம் அவுட் ஆகியுள்ளார், ஜேமிசனின் ஆர்சிபி காண்ட்ராக்ட் அவ்வளவுதானா என்கின்றனர் நெட்டிசன்கள். முதல் இன்னிங்ஸில் ஜேமிசன் கோலியை ஏமாற்றிய ஒரு பந்தில் எல்.பி.ஆக்கினார். இப்போது பின்னால் கேட்ச்.

    ஜேமிசனை ஆடத்தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். அதே போல் புஜாரா ஓவர் பிட்ச் பந்தையெல்லாம் கைக்கு நேராக அடித்துக் கொண்டிருந்தவர் சற்று முன் ஜேமிசனின் அபாரமான மூன்றரையாவது ஸ்டம்ப் லைனில் வீச புஜாரா ஒன்றும் செய்யாமல் இருந்திருந்தால் கூட போதுமானது, மட்டையை பந்தின் மீது தொங்க விட்டார் எட்ஜ் ஆகி டெய்லர் கையில் தஞ்சமடைந்தது.

    இப்போது ரிஷப் பந்த் 5 ரன்களுடனும் ரகானே 0-விலும் ஆடி வருகின்றனர், இந்திய அணி 45 ரன்களைத்தான் முன்னிலையாக பெற்றுள்ளது. இன்று இன்னமும் 89.3 ஓவர்கள் உள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலையில் கோலியும் புஜாராவும் இந்திய அணியை விட்டு விட்டுச் சென்ரனர். மொத்தத்தில் கைல் ஜேமிசனை ஆடத் தெரியவில்லை.
    Published by:Muthukumar
    First published: