உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாமபியன்ஷிப் இறுதி போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், சர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம்பெறமால் இருந்தனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி : விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், சத்தீஸ்வர் புஜாரா, அஜங்கிய ராஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்.), ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.