• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Virat Kohli | ‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்’- விராட் கோலியின் ‘பைனலுக்கு மரியாதை’

Virat Kohli | ‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்’- விராட் கோலியின் ‘பைனலுக்கு மரியாதை’

விராட் கோலி

விராட் கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், அதுவும் இத்தகைய டெஸ்ட் பைனல் நடப்பது இதுவே முதல்முறை அதில் விளையாடுகிறோம் என்பதில் உற்சாகத்துக்குக் குறைவில்லை ஆனால் இதன் வெற்றி தோல்வியை வைத்து அணியின் திறமையையோ அருமை பெருமைகளையோ எடை போட முடியாது என்கிறார் விராட் கோலி.

  • Share this:
    இதுவும் மற்ற டெஸ்ட் போட்டிகளைப் போல ஒன்று என்ற அளவில்தான் நினைக்கிறோம். மற்றபடி வெளியிலிருந்து பார்க்கப்படும் பார்வைகள் வேறு உள்ளிருந்து நாங்கள் பார்க்கும் பார்வை மாறுபடும் என்று கூறுகிறார் விராட் கோலி.

    மேலும் கடந்த 4-5 ஆண்டுகளாக இந்த இந்திய அணி அன்னிய மண்ணில் வெற்றி பெற்று வருகிறது எனவே இந்த ஒரு போட்டியை வைத்து எது சிறந்த அணி , யார் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றெல்லாம் அறுதியிட முடியாது என்கிறார் விராட் கோலி.

    “ஐந்து நாட்களுக்கு ஒரு போட்டி நடைபெறவிருக்கிறது. இது எதையும் பிரதிபலிக்காது. கிரிக்கெட்டை புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும் ஒரு போட்டியை வைத்து எந்த அணியையும் எடைபோட முடியாது என்பது. மேலும் 4-5 ஆண்டுகளாக என்ன நடக்கிறது என்பதும் கிரிக்கெட் தெரிந்தவர்களுக்குப் புரியும்.

    Also Read: WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜொலிக்கப்போவது இவர் தான் - சச்சின் கணித்த வீரர் யார்?

    நாம் வெற்றி பெற்றாலும் கிரிக்கெட் அதன் பிறகு நின்று விடப்போவதில்லை, தோற்றாலும் கிரிக்கெட் நிற்கப்போவதில்லை. திறமையை வெளிப்படுத்துவதற்காக ஆடுகிறோம். ஒரு அணியாக நாங்கள் யார் என்பதை புரிந்து கொள்ள ஆடுகிறோம்.

    அணித்தேர்வில் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யுமாறு தேர்வு செய்துள்ளோம். பேட்டிங்கில் ஆழம் மற்றும் பவுலிங்கில் போதிய ஆதாரங்கள் தேவை என்று தேர்வு செய்துள்ளோம்.

    Also Read: India vs New Zealand | நியூசிலாந்தை வீழ்த்த இந்திய அணி கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

    இதனை எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய போட்டி என்பதாகப் பார்க்க முடியாது, முதல் முதலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி நடக்கிறது, அதற்கான ஆர்வமும் உற்சாகமும் குறைவில்லாமல் உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது இன்னொரு டெஸ்ட் போட்டி அவ்வளவே. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என்பதெல்லாம் வெளியேயிருந்து பார்க்க அருமையாக இருக்கும். ஒரு ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாக இருக்க முடியாது. இது ஒரு மகா தருணம், வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கும் கிரிக்கெட்டும் அப்படித்தான்.

    இந்தத் தருணத்தை மகிழ்வுடன் அனுபவிக்க வேண்டும். இளம் வீரர்களாக நாங்கள் எங்கள் முதல் டெஸ்ட்டை ஆடியதைப் போன்ற அனுபவமாக இதைப் பார்க்க முடியாது. இது பேட்டுக்கும் பந்துக்குமான போட்டி என்பதை நினைவில் கொண்டால் நல்லது” என்றார் கோலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: