IND vs NZ | கேன் வில்லியம்சனை ரகானேவோடு வேண்டுமானால் ஒப்பிடலாம் கோலியுடன் அல்ல: மைக்கேல் வானுக்கு பனேசர் பதிலடி

கோலி-வில்லியம்சன்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18ம் தேதி நடப்பதையொட்டி இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் புதிய விவாதம் ஒன்றைக் கிளப்பி விட்டார். கோலியா, வில்லியம்சனா என்ற ஒரு ஒப்பீட்டு புழுதியை அவர் கிளப்பி விட அது இன்னமும் ஓய்ந்த பாடில்லை.

  • Share this:
    ஸ்பார்க் ஸ்போர்ட்டுக்கு மைக்கேல் வான் அளித்த பேட்டியில் கூறும்போது, “கேன் வில்லியம்சன் இந்தியராக இருந்திருந்தால் உலகின் சிறந்த வீரராகாப் பேசப்பட்டிருப்பார். ஆனால் அவர் பேசப்படவில்லை, காரணம் விராட் கோலி அவ்வளவு ஒன்றும் பெரிய வீரர் இல்லை என்று நாம் கூறத் தடை செய்யப்பட்டிருக்கிறோம். ஏனெனில் சமூக வலைத்தளவாசிகளின் தாக்குதலுக்கு நாம் தப்ப முடியாது.

    எனவேதான் கோலியப் பாராட்டி விட்டு சிலபல கிளிக்குகளையும் லைக்குகளையும் அள்ளிக்கொள்கின்றனர். அனைத்து வடிவங்களிலும் வில்லியம்சனும்தான் சமமான முறையில் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் ஆடும் விதம், அந்த எளிமை, தான் எதுசெய்தாலும் அந்த அமைதி பாராட்டுக்குரியவை” என்று கூறி அவர் சொன்னது போலவே வாங்கிக் கட்டிக் கொண்டார்.

    ஆனால் இங்கிலாந்தின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் மான்ட்டி பனேசர், மைக்கேல் வானுக்குப் பதிலடி கொடுக்கும் வண்ணம், “இருவருமே மிக மிகச் சிறந்த வீரர்கள். எந்தச் சூழ்நிலையிலும் அணியை இருவருமே நிலை நிறுத்தக் கூடியவர்கள். டி20, ஒருநாள் தொடர்களில் விராட் கோலி மிகச்சிறந்த முறையில் இலக்குகளை விரட்டி வெற்றி பெறத் தரக்கூடியவர்.

    ஆனால் கேன் வில்லியம்சனும் இதற்குச் சமமாக 3 வடிவங்களிலும் அசத்தி வருகிறார். கேன் வில்லியம்சன் ரோகித் சர்மாவை விட ஒரு படி மேல் எனலாம், ஆனால் நிச்சயமாக விராட் கோலிக்கு ஒரு படி கீழ்தான்.

    கேன் வில்லியம்சன் இந்தியராக இருந்திருந்தால் அஜிங்கிய ரகானேவுக்கு ஒரு நல்ல பதிலி வீரராக திகழ்ந்திருப்பார் என்றே கூற முடியும்.

    ஆகஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா 5-0 என்று வெல்லும். ஏனெனில் தொடர் ஆகஸ்டில் நடைபெறுகிறது. அப்போது வெயில்தான் அடிக்கும். இதனால் பிட்ச் காய்ந்து இந்திய பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். மேலும் 5 டெஸ்ட் போட்டிகளும் குறைந்த இடைவெளியில் நடக்கவிருப்பதால், இந்திய அணியிடம் உத்வேகம் தங்கியிருக்கும்.

    3வது இந்தியாவின் வேகப்பந்து வீச்சுத் தெரிவு அபாரமாக உள்ளது. முன்பு அப்படி கிடையாது. மேலும் அலிஸ்டர் குக் ஓய்வு பெற்றதிலிருந்து இங்கிலாந்தின் டாப் ஆர்டர் சரியாக இல்லை என்பதே உண்மை.” என்கிறார் மான்ட்டி பனேசர்.
    Published by:Muthukumar
    First published: