உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : வெற்றி பெறும் அணிக்கு எத்தனை கோடி பரிசுத் தொகை தெரியுமா?

 • Share this:
  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி மற்றும் ரன்னர் அப் அணிக்கு பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாமபியன்ஷிப் இறுதி போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18-ம் தேதி தொடங்க உள்ளது.

  Also Read : தலையில் காயம்: நினைவாற்றலை இழந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ்!

  இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.11.72) கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். ரன்னர் அப் அணிக்கு 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5.86) கோடி வழங்கப்பட உள்ளது. ஒரு வேளை போட்டி டிராவில் முடிவடைந்தால் பரிசுத்தொகை இருவருக்கும் சமமாக பிரித்து தரப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேப்போன்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் பிடித்த அணிக்கு 4.5 மில்லியன் டாலரும், 4-வது இடம் பிடித்த அணிக்கு 3.4 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும். 5-வது இடம் பிடித்த அணிக்கு 2 மில்லியன் டாலரும் மற்ற அணிகளுக்கு தலா 1 மில்லியன் டாலரும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: