புவனேஷ்வர் குமாரைக் கூப்பிடுங்க.. ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா சரியில்லை- ரசிகர்கள் கொந்தளிப்பு

புவனேஷ்வர் குமார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய பவுலர்கள் ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா விக்கெட்டுகளைக் கைப்பற்ற திணறும் நிலையில் புவனேஷ்வர் குமாரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

  • Share this:
    சவுத்தாம்டனில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது, இதில் நியூசிலாந்து பவுலர்கள் அளவுக்கு இந்திய பவுலர்களுக்கு ஸ்விங் ஆகவில்லை.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய பவுலர்கள் ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா விக்கெட்டுகளைக் கைப்பற்ற திணறும் நிலையில் புவனேஷ்வர் குமாரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

    இதனையடுத்து கிரிக்கெட் பந்தை நன்றாக ஸ்விங் செய்யும் புவனேஷ்வர் குமாரைக் கூப்பிடுங்க, அவரை ஏன் அனாவசியமாக உட்கார வைக்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.

    ஸ்விங்குக்கு சாதகமானப் பிட்சில் இடது கை பேட்ஸ்மென்களை எல்.பி. ஆக்குவதற்காக, ஏதோ இந்தியாவில் நடப்பது போலவும் இவர்களுக்கு ரெடியாக எல்.பி.தர அங்கு நடுவர்கள் இருப்பது போலவும் ரவுண்ட் த விக்கெட்டில் வீசும் உத்தியைக் கடைப்பிடித்தனர்.

    இதில் ஷமி மட்டுமே அச்சுறுத்தலாக திகழ பும்ரா, இஷாந்த் சர்மா நேர் நேர் தேமா பவுலராகினர், வேகப்பந்து வீச்சு பிட்சில் 34வது ஓவரில் அஸ்வின் வந்து விக்கெட்டை எடுக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் பும்ராவை ஒரே ஓவரில் 10 ரன்கள் விளாசினர், அவரது பந்து வீச்சில் ஊடுருவும் தன்மை திடீரெனக் காணாமல் போய் விட்டது. இஷாந்த் சர்மா கூட டெவன் கான்வே விக்கெட்டை தூக்கி எறிந்ததால்தான் அவரது விக்கெட்டை கைப்பற்ற முடிந்தது, இஷாந்த் வீசிய பந்தினால் அவர் அவுட் ஆகவில்லை.

    இந்நிலையில் புவனேஷ்வர் குமாரைக் கூப்பிட்டுங்கள் என்ற குரல்கள் ரசிகர்களிடையே வலுத்துள்ளது. 21 டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் அவர் நன்றாக வீசியுள்ளார், ஆனால் ரவிசாஸ்திரி விராட் கோலி கூட்டணி அவரை திடீரென டெஸ்ட்டிற்கு லாயக்கில்லை என்று கழற்றி விட்டுள்ளனர். பேட்டிங்கும் ஆடுவார், ஆனால் இவர்களுக்கெல்லாம் ஜடேஜா மிகவும் தோஸ்த், இங்கு தோஸ்த் என்ற ஒரு தன்மையும் சிலபல வணிக நலன்களும் முன்னுரிமை பெறுகின்றன.

    கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் புவனேஷ்வர் குமார் அதன்பிறகு கழற்றி விடப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இவருக்கு ஆதரவாக ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் சில இதோ:







    இந்த ரீதியில் நெட்டிசன்கள் புவனேஷ்வர் குமாருக்கு தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: