நியூசிலாந்துக்கு எதிராக மொகமது ஷமி எனும் துருப்புச் சீட்டு- கமின்ஸ், பும்ராவை விடவும் சிறந்த பவுலர், எப்படி?

மொகமட் ஷமி.

நியூசிலாந்துக்கு எதிராக ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக மொகமட் ஷமி விளங்குவார்.

 • Share this:
  புதிய பந்தில் வேகத்துடன் அவுட்ஸ்விங், இன்ஸ்விங், பந்து கொஞ்சம் பழையதானவுடன் ரிவர்ஸ் ஸ்விங் ஆகியவற்றில் ஷமி கைதேர்ந்தவர். அனைவரும் ஜஸ்பிரித் பும்ரா என்று கூறுகின்றனர், ஆனால் அவருக்கு இப்போதுதான் திருமணம் ஆகியுள்ளது, எனவே பழைய ஆக்ரோஷம் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  இஷாந்த் சர்மா, ஜேசன் கில்லஸ்பியின் மோதிரக் கையால் குட்டு வாங்கியவர் அதனால் பந்தின் தையலை நேராகப் பிடித்து குட்லெந்த்தில் அவுட் ஸ்விங்கர் இன்ஸ்விங்கர் வீசுவதில் இப்போது கைதேர்ந்தவராக இருக்கிறார், ஆனாலும் ஷமிதான் துருப்புச் சீட்டு, ஏன் என்பதை பார்ப்போம்:

  ஜூலை 2017க்குப் பிறகு ஷமி காயத்திலிருந்து மீண்டு திரும்பவும் இந்திய அணிக்கு வந்தது முதல் 38 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆடியுள்ளது. இதில் ஷமி 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இந்த 28 டெஸ்ட்களில் 104 விக்கெட்டுகளை 23.92 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 45 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற சராசரியில் அவர் விக்கெட்டை எடுத்துள்ளது அவரது விக்கெட் எடுக்கும் திறமைகளுக்கு ஒரு சான்றாக உள்ளது.

  குறைந்தது 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 24 வேகப்பந்து வீச்சாளர்களில் ஷமியின் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக உள்ளது. பாட் கமின்ஸ், டிம் சவுத்தி, பும்ரா, ட்ரெண்ட் போல்ட், ஆண்டர்சன், பிராட் ஆகியோரை விடவும் குறைந்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தியு019ள்ளார்.

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஷமி 36 விக்கெட்டுகளை 19.77 என்ற சராசரியில் வீழ்த்தியுள்ளார். 10 போட்டிகளில் 6 போட்டிகளில் சீராக ஒரு இன்னிங்ஸுக்கு 4 விக்கெட்டுகளை ஷமி கைப்பற்றியுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்டில் ஷமி 29 ஓவர்கலில் 58 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடக்க ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு எதிரணியினரின் மிடில் ஆர்டரையும் சில வேளைகளில் அசைத்துப் பார்த்துள்ளார் ஷமி. 2019-ல் மொகமட் ஷமி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியில் ஹம்சா, டுபிளெசிஸ், பவுமா ஆகியோரை 4 ஓவர்களில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவை 22/4 என்று இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டிப்படைத்தார்.

  Also Read:  WTC Final IND vs NZ | இந்திய பேட்ஸ்மென்களுக்கு காத்திருக்கும் வேதனை: பைனலில் பந்துகள் வேகத்துடன் எழும்பும் ஆடுகளம்

  மேலும் ஷமி இந்த 28 டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திய 104 விக்கெட்டுகளில் 72 விக்கெட்டுகள், இதில் பேட்ஸ்மென்கள் 20 ரன்களை எட்டுவதற்கு முன்பாகவே வீழ்த்தியுள்ளார்.

  ஷமி பந்தின் தையலை பிடித்து கடைசி நேரத்தில் விரலை சொடக்கி திசையை தீர்மானித்து வீசுவதால் அவுட் ஸ்விங்கர், இன்ஸ்விங்கர் அவருக்கு தோதாக வருகிறது. நல்ல ஆக்‌ஷன், துல்லியம், விக்கெட் எடுக்கும் திறமை, அதுவும் டாப் ஆர்டர் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளைச் சாய்க்கும் திறமை ஆகியவை இறுதிப் போட்டியிலும் சரி அதன் பிறகான இங்கிலாந்து தொடரிலும் சரி ஷமி ஒரு துருப்புச் சீட்டு என்பதை உணர்த்துகிறது.
  Published by:Muthukumar
  First published: