Home /News /sports /

பெங்கால் அணியை விட்டு விலகுகிறேன் - என்.ஓ.சி. கொடுங்கள்- விருத்திமான் சஹா - காரணம் என்ன? மனைவி விளக்கம்

பெங்கால் அணியை விட்டு விலகுகிறேன் - என்.ஓ.சி. கொடுங்கள்- விருத்திமான் சஹா - காரணம் என்ன? மனைவி விளக்கம்

சஹா

சஹா

பெங்கால் ரஞ்சி அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு விருத்திமான் சஹா தான் இனி ஒருபோதும் பெங்கால் அணிக்கு ஆடப்போவதில்லை தயவு செய்து எனக்கு என்.ஓ.சி. கொடுங்கள் என்று கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பலரும் ஏன் இந்தத் திடீர் முடிவு? காரணம் என்னவாக இருக்கும் என்று எண்ணும் வேளையில் சஹா மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    அவரது மனைவி ரோமி மித்ரா, சஹாவின் இந்த முடிவுக்குக் காரணம், அதுவும் குஜராத் டைட்டன்ஸுக்காக வெளுத்து வாங்கி வரும் நிலையில் இப்படி ஒரு முடிவா என்று அதிர்ச்சியளித்தற்குக் காரணம், பெங்காள் கிரிக்கெட் சங்கம் (சிஏபி) சஹாவை புண்படுத்தி விட்டனர், சில மாதங்களுக்கு முன்பாக சொந்தக் காரணங்களுக்காக தனக்கு சில போட்டிகளிலிருந்து விடுப்பு வேண்டும் என்று கேட்ட போது அந்த கிரிக்கெட் சங்க அதிகாரி, ‘சஹாவின் உண்மைத்தன்மையை சந்தேகிக்கும் விதமாகவும் அவரது கடமை உணர்வை கேள்விக்குட்படுத்தும் விதமாகவும் அறிக்கை விட்டார், இதுதான் காரணம் என்றார்.

    “சில மாதங்களுக்கு முன்பாக சஹா சில ஆரம்ப போட்டிகளிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக விடுப்பு வேண்டும் என்று கேட்ட போது கிரிக்கெட் சங்க அதிகாரி சஹாவின் ஓர்மையை கேள்விக்குட்படுத்தி அறிக்கை விட்டார். மூத்த வீரராக, பெங்கால் கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்த சஹாவின் அர்ப்பணிப்பு உணர்வை கொச்சை படுத்தலாமா? சஹா அவரது கூற்றினால் பெரிதும் காயமடைந்தார்” என்றார்.

    சரி வேண்டாம் நாக் அவுட் போட்டிகளிலாவது ஆடுங்கள் என்று சஹாவை சிஏபி கேட்டது, ஆனால் சஹா தான் இனி பெங்காலுக்கு ஆடப்போவதில்லை என்று கூறிவிட்டார். எனவே ஆட்சேபணை இன்மை சான்றிதழ் கேட்டுள்ளார்.

    சஹாவின் அர்ப்பணிப்பு உணர்வை சந்தேகப்பட்ட அதிகாரியின் பெயர் தேவவ்ரத தாஸ். அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று சஹா வலியுறுத்தினார்.

    விருத்திமான் சஹா இந்திய அணியிலிருந்து தேவையில்லாமல் நீக்கப்பட்ட பிறகே பத்திரிகையாளர் ஒருவர் இவரை மிரட்ட அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது, ஆனால் அந்த சர்ச்சை, இந்திய அணி நிர்வாகம் கொடுத்த மன உளைச்சல்களை மீறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பிரமாதமாக ஆடி வருகிறார். பவர் ப்ளே கிங்காக இருக்கிறார். இன்று ஆர்சிபிக்கு என்ன செய்யப்போகிறாரோ என்ற ஒரு அச்சுறுத்தல் சஹா மீது எதிரணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    ஆனால் தொடர்ந்து அவமானத்திற்கு ஆளாகும் வீரராக சஹா நடத்தப்படுவது பலருக்கும் வேதனையளிப்பதாக உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Wriddhiman Saha

    அடுத்த செய்தி