இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் விருத்திமான் சாஹா, இலங்கை தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பிறகு பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் இந்திய தேர்வுக் குழுவை நோக்கி தன் வார்த்தைகளினால் ஈட்டி பாய்ச்சியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தன்னிடம் 'ஓய்வு' பற்றி யோசிக்கச் சொன்னதாகத் தெரிவித்தார். இனிமேல் தேர்வுக்கு தன் பெயர் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று கூறினார்களாம்.
முன்னதாக, விருத்திமான் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று கூறப்பட்டதால், ரஞ்சி டிராபியில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்திய அணித்தேர்வு, சவுரவ் கங்குலி, திராவிட் மீது தன் அம்புகளை எய்திய விருத்திமான் சஹா, கூறியதாவது:
இனிமேல் நான் பரிசீலிக்கப்படமாட்டேன் என்று அணி நிர்வாகம் கூறியிருந்தது. இந்திய அணி அமைப்பில் நான் அங்கம் வகிக்கும் வரை இதை என்னால் சொல்ல முடியவில்லை. பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூட ஓய்வு பெறுவது பற்றி யோசிக்குமாறு பரிந்துரைத்தார்.
கடந்த நவம்பரில் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வலி நிவார்ணை மாத்திரைகள் எடுத்துக் கொண்டு பேட் செய்து நான் ஆட்டமிழக்காமல் 61 ரன்களை எடுத்தபோது, தாதா கங்குலி Whatsapp மூலம் என்னை வாழ்த்தினார்.
தொடர்புடைய முந்தைய சஹா பேட்டி: இந்திய அணியின் ஓய்வறையில் நடந்தது எதையும் நான் பேச முடியாது, நான் எதையும் சொல்லக்கூடாது: சஹா பரபரப்பு பேட்டி
அவர் பிசிசிஐயின் தலைவராக இருக்கும் வரை நான் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் தாதா தைரியம் அளித்தார். வாரியத் தலைவரின் இத்தகைய செய்தி உண்மையில் என் நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால் எல்லாம் ஏன் வேகமாக மாறியது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு கூறினார் சஹா.
இந்திய டெஸ்ட் அணி வருமாறு: ரோஹித் சர்மா (சி), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ஆர்.அஷ்வின் (உடற்தகுதி), ரவி ஜடேஜா, ஜெயந்த் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி , முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.