Home » News » Sports » CRICKET WRIDDHIMAN SAHA NOT WORRIED ABOUT HOW RISHABH PANT IS BATTING MUT

ரிஷப் பந்த் எப்படி பேட் செய்தால் எனக்கென்ன? ஒப்பிடாதீர்கள்: விருத்திமான் சஹா எரிச்சல்

என்னையும் ரிஷப் பந்த்தையும் ஒப்பிடுவதை நான் 2018 முதல் கேட்டு வருகிறேன். நான் என் வேலையைச் செய்து வருகிறேன், பந்த் எப்படி பேட் செய்கிறார் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.

ரிஷப் பந்த் எப்படி பேட் செய்தால் எனக்கென்ன? ஒப்பிடாதீர்கள்: விருத்திமான் சஹா எரிச்சல்
ரிஷப் பந்த்-சஹா
  • Share this:
ரிஷப் பந்த்தையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசுவதை 2018 முதல் கேட்டு வருகிறேன், அவர் எப்படி பேட் செய்கிறார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று விருத்திமான் சஹா கேள்வி ஒன்றிற்கு சற்றே எரிச்சலுடன் பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தொடரில் முதல் போட்டியில் 36 ஆல் அவுட் ஆன போது அணியில் இருந்த சஹா, அடுத்த போட்டியிலிருந்து தன் இடத்தை இழந்தார், ரிஷப் பந்த் அவர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் சஹாவை ஒப்பிடும்போது ஒன்றுமில்லை என்றாலும் ரிஷப் பந்த்தின் பேட்டிங்கை ஒப்பிடும்போது சஹாவும் அருகில் நிற்க முடியாது என்பதே இப்போது பேசப்பட்டு வரும் உண்மையாகும்.


ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ந்து 2வது முறையாக ரிஷப் பந்த் தன் பேட்டிங் திறமைகளை நிரூபித்துள்ளார், சிட்னியில் மிரட்டல் இன்னிங்ஸ், பிரிஸ்பனில் வரலாற்று வெற்றி இன்னிங்ஸ் என்று அணியில் தன் இடத்தை சிமெண்ட் போட்டு தக்கவைத்துள்ளார் பந்த்.

இந்நிலையில் சஹாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக சஹா கூறியதாவது:

என்னையும் ரிஷப் பந்த்தையும் ஒப்பிடுவதை நான் 2018 முதல் கேட்டு வருகிறேன். நான் என் வேலையைச் செய்து வருகிறேன், பந்த் எப்படி பேட் செய்கிறார் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.அதற்காக என் ஆட்டத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். விக்கெட் கீப்பர் யார் என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்வார்கள்.

எதிரணி பேட்ஸ்மெனை அவுட் செய்யும் வாய்ப்பை ஒரு விக்கெட் கீப்பர் இழக்கச் செய்தார் என்றால், அது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது என்றால் விக்கெட் கீப்பிங் பணி ஒரு ஸ்பெஷலிஸ்ட் பணி என்பது தெரியவரும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில்.

எனக்கு வரும் கேட்சை எல்லாம் நான் பிடித்து விடுவேன் என்று கூறவில்லை, ஆனால் விக்கெட் கீப்பிங் ஸ்பெஷலிஸ்ட் பணி என்பது என் கருத்து, எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாகப் பயன்படுத்துவேன் என்றார் ஆங்கில ஊடகம் ஒன்றில் சற்றே எரிச்சலுடன்.

அடிலெய்ட் டெஸ்ட்டில் சஹா 9 மற்றும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்த டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 இந்திய டெஸ்ட் அணி அதன் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையை எடுத்து தோற்றது குறிப்பிடத்தக்கது.
First published: January 25, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories