இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா தனது டி-20 சதத்தை பாகிஸ்தான் ராணுவத்தின் வசம் இருக்கும் அபிநந்தனுக்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
சையது முஷ்டாக் அலி டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கட்டாக்கில் நேற்று (பிப்.27) நடந்த போட்டியில் பெங்கால் அணியும், அருணாச்சலப் பிரதேச அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் அதிரடி சதத்தால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய அருணாச்சலப் பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 107 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணி அபார வெற்றி பெற்றது.
பெங்கால் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சஹா. அவர் 62 பந்துகளைச் சந்தித்து 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உள்பட மொத்தம் 129 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில், விருத்திமான் சஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய போட்டியில் எனது ஆட்டத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இந்த சதம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. எனது சதத்தை இந்தியாவின் வீர மகன் ஐ.ஏ.எப் கமாண்டர் அபிநந்தனுக்கு சமர்பிக்கிறேன். அவர் விரைவில் பத்திரமாக நாடு திரும்ப கடவுளை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
விருத்திமான் சஹா அடித்துள்ள 2 -வது டி-20 சதம் இதுவாகும். இதற்கு முன், 2014 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சதம் அடித்திருந்தார்.
மறக்க முடியாத தோல்வி... முதல் முறையாக தொடரை இழந்த கேப்டன் கோலி!
VIDEO: தோனியைப் பார்த்து வாயைப் பிளந்த ஆஸி. பவுலர்!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.