டபிள்யூ.பி.எல் என அழைக்கப்படும் மகளிர் ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி.வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் டபிள்யூ.பி.எல். தொடர் அடுத்த மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமையன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி – மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மறுநாள் ஞாயிறன்று 3 போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் போட்டியில் பெங்களூரு, டெல்லி அணிகளும், அடுத்த போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன. மொத்தம் 4 நாட்களுக்கு 2 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2 போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி மாலை 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் ஆரம்பம் ஆகிறது.
அனைத்து போட்டிகளும் மும்பையின் டி.ஒய். பாட்டீல் மற்றும் ப்ராபோர்ன் மைதானங்களில் நடத்தப்படுகின்றன. இரு மைதானங்களிலும் தலா 11 போட்டிகள் நடைபெறுகிறது. லீக் போட்டிகளில் இறுதியாட்டம் மார்ச் 21ஆம்தேதி ப்ராபோர்ன் மைதானத்தில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ்அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. எலிமினேட்டர் சுற்று டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் மார்ச் 24ஆம் தேதியும், இறுதிப் போட்டி 26ஆம் தேதி ப்ராபோர்ன் மைதானத்திலும் நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket