முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL T20 League : டபிள்யூ.பி.எல். ஏலத்தை நேரலையாக பார்ப்பது எப்படி? விபரம் இதோ…

WPL T20 League : டபிள்யூ.பி.எல். ஏலத்தை நேரலையாக பார்ப்பது எப்படி? விபரம் இதோ…

டபிள்யூ.பி.எல். தொடரின் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா

டபிள்யூ.பி.எல். தொடரின் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா

மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் டபிள்யூ.பி.எல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் அணிகள் பங்கேற்கும் டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தாண்டு முதல் தொடங்கவுள்ளது. இதையொட்டி நடைபெறவுள்ள ஏலத்தை எதில் பார்க்கலாம் என்பது பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். பிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தாண்டு முதல் டபிள்யூ.பி.எல். எனப்படும் விமன்ஸ் ப்ரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 5 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 5 அணிகளும் ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் அகமதாபாத்தின் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை அதானி ஸ்போர்ட்ஸ்லைனும், மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டெல்லி அணியை ஜே.எஸ்.டபிள்யூ – ஜி.எம்.ஆர். கிரிக்கெட் நிறுவனமும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. அணிகள் உருவாக்கத்தை தொடர்ந்து வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். இந்த ஏலம் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் டபிள்யூ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

டபிள்யூ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு மொத்தம் 1,525 வீராங்கனைகள் விண்ணப்பம் செய்திருந்தனர். பல்வேறு தகுதியின் அடிப்படையில் மொத்தம் 409 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 246 பேர் இந்தியாவையும், 163 பேர் வெளிநாட்டையும் சேர்ந்தவர்கள். 24 வீராங்கனைகளுக்கு குறைந்தபட்ச அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நட்சத்திர வீராங்கனைகளான தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா, யு19 உலகக்கோப்பை வின்னர் கேப்டன் ஷெபாலி வர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் டபிள்யூ.பி.எல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் மும்பையின் டி.ஒய். பாட்டீல் மற்றும் ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டபிள்யூ.பி.எல். ஏலம் வரும் திங்களன்று மதியம் 2.30-க்கு ஆரம்பம் ஆகிறது. இதனை ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஆன்லைனியில் ஜியோ சினிமா இணையதளம் மற்றும் ஜியோ சினிமா ஆப்-இல் ஏலத்தை நேரலையாக காணலாம்

First published:

Tags: Cricket