முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL : டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட 1000-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் விருப்பம்…

WPL : டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாட 1000-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் விருப்பம்…

டபிள்யூ.பி.எல்.

டபிள்யூ.பி.எல்.

அணிகள் உருவாக்கத்தை தொடர்ந்து வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். இந்த ஏலம் வரும் 13-ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு 1000-க்கும் அதிகமான வீராங்கனைகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தாண்டு முதல் டபிள்யூ.பி.எல். எனப்படும் விமன்ஸ் ப்ரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 5 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 5 அணிகளும் ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் அகதாபாத்தின் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை அதானி ஸ்போர்ட்ஸ்லைனும், மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டெல்லி அணியை ஜே.எஸ்.டபிள்யூ – ஜி.எம்.ஆர். கிரிக்கெட் நிறுவனமும், லக்னோ அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன.

அணிகள் உருவாக்கத்தை தொடர்ந்து வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். இந்த ஏலம் வரும் 13-ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆயிரத்திற்கும் அதிகமான வீராங்கனைகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மொத்தம் 1,214 வீராங்கனைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகபட்சமாக 120 வீராங்கனைகள் மட்டுமே எலத்தில் எடுக்கப்பட முடியும். வீராங்கனைகள் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்திருப்பது டபிள்யூ.பி.எல்லின் வெற்றியை உறுதி செய்வதாக அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதேபோன்று இந்த தொடருக்கான ஸ்பான்சர்களை வரவேற்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Cricket