முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : குஜராத் அணியை 143 ரன் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ்

மகளிர் ஐபிஎல் : குஜராத் அணியை 143 ரன் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ்

பேட்டிங் - பவுலிங்கில் அசத்திய மும்பை அணி

பேட்டிங் - பவுலிங்கில் அசத்திய மும்பை அணி

மும்பை தரப்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டுகளையும், அமேலியா கெர், நேட் சீவர் ப்ரன்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அறிமுகப் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். யஸ்திகா 1 ரன்னில் வெளியேற அடுத்து இணைந்த ஹேலி – நேட் சீவர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. ஹேலி 47 ரன்னும், நேட் சீவர் 23 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் – அமெலியா கெர் இணை இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் கவுர் 30 பந்தில் 14 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்தார்.

அமெலியா கவுர் 24 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் ஸ்னே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தார். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் இறங்கினர். மும்பை பவுலர்களின் அதிரடியான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் குஜராத் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

தொடக்க வீராங்கனைகள் சபினேனி மேகனா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பெத் மூனி ரன் ஏதும் எடுக்காத நிலையில் காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறினார். ஹர்லின் தியோல், ஆஷ்லே கார்டனர் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினர். அனாபெல் சதர்லேண்ட் 6 ரன்கள் எடுத்தார். சிறிதுநேரம் தாக்குப் பிடித்த தயாளன் ஹேமலதா 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 29 ரன்கள் சேர்த்தார். 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழநத குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து 123 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை தரப்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டுகளையும், அமேலியா கெர், நேட் சீவர் ப்ரன்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

First published:

Tags: WIPL