முகப்பு /செய்தி /விளையாட்டு / பாலிவுட் முன்னணி நடிகைகள் பங்கேற்கும் மகளிர் ஐபிஎல் தொடக்க விழா… மொபைலில் இலவச நேரலை…

பாலிவுட் முன்னணி நடிகைகள் பங்கேற்கும் மகளிர் ஐபிஎல் தொடக்க விழா… மொபைலில் இலவச நேரலை…

கியாரா அத்வானி - க்ரித்தி சனோன்

கியாரா அத்வானி - க்ரித்தி சனோன்

இரவு 8 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆரம்பம் ஆகிறது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

மகளிர் ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ளதையொட்டி, பாலிவுட் முன்னணி நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் மும்பையில் நடைபெறுகின்றன. இவற்றை ஜியோ சினிமா ஆப் மூலம் மொபைல் போனில் இலவசமாக பார்த்து மகிழலாம். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் ஆகிறது. ஐபிஎல் தொடரைப் போன்று இதற்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். இதையொட்டி, போட்டிகளை நடத்தும் பிசிசிஐ பிரமாண்ட அளவில் தொடருக்கு விளம்பரங்களை செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா, முதல் மகளிர் ஐபிஎல் தொடருக்கான டைட்டிலை ஸ்பான்சர் செய்கிறது. குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் முதல் தொடரில் களம் காண்கின்றன. தொடக்க விழாவில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகள் கியாரா அத்வானி, க்ரித்தி சனோன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இசை கலைஞர்கள் ஷங்கர் மகாதேவன், ஏ.பி. தில்லான் உள்ளிடோரின் இசை நிகழ்ச்சிகளும் இன்று நடத்தப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆரம்பம் ஆகிறது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்படும். மொத்தம் 20 லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2 ப்ளே ஆஃப் சுற்றுக்கு பின்னர் இறுதிப் போட்டி நடைபெறும். மொத்தம் 23 நாட்கள் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் 7 நாடுகளைச் சேர்ந்த 87 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இறுதிப் போட்டி இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஜியோ சினிமா (JioCinema) ஆப்பில் இலவசமாக பார்த்து மகிழலாம்

First published:

Tags: Cricket, IPL