முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL : குஜராத் அணியின் பயிற்சியாளராக ரச்சேல் ஹெய்ன்ஸ் நியமனம்!!

WPL : குஜராத் அணியின் பயிற்சியாளராக ரச்சேல் ஹெய்ன்ஸ் நியமனம்!!

ரச்சேல் ஹேன்ஸ்

ரச்சேல் ஹேன்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை ரச்சேல் ஹேன்ஸ் 6 முறை உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டபிள்யூ.பி.எல். தொடரில் குஜராத் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனையும், உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவருமான ரச்சேல் ஹேன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக ரச்சேலை குஜராத் அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கிறது. இதேபோன்று அணியின் பவுலிங் பயிற்சியாளராக நூஷின் அல் காதிர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர்கள் துஷார் அரோத் பேட்டிங் பயிற்சியாளராகவும், கவான் டிவினிங் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விமன்ஸ் ப்ரீமியர் லீக் எனப்படும் மகளிர் அணிகளுக்கான டி20 லீக் இந்தாண்டு ஆண்டு முதல் ஆரம்பமாகிறது. இதனை சுருக்கமாக டபிள்யூ.பி.எல். என்று அழைக்கிறார்கள். குஜராத் அணியின் பயிற்சியாளர்கள் அறிவிப்புக்கு பின்னர் அணியின் ஆலோசகர் மிதாலி ராஜ் கூறுகையில், ‘பயிற்சியாளர்கள் நால்வருமே பல்வேறு களங்களில் தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள். அவர்களது பங்களிப்பால் அணியின் திறமை உச்சத்தை தொடும் என்று நம்புகிறேன்.

இந்த 4 பயிற்சியாளர்களின் பின்புலம் குஜராத் அணி வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும். அணிக்காக சிறந்த திறமையாளர்களை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.’ என்று கூறியுள்ளார். தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை ரச்சேல் ஹேன்ஸ் 6 முறை உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket