முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி

WPL Delhi Capitals Women vs Mumbai Indians | 18 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த டெல்லி அணி 105 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.

தொடங்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து அணியை மோசமான சரிவில் இருந்து டெல்லி அணியை மீட்டெடுத்தார். பின்னர் வந்த ஜெமிமா 25 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் நிலைக்கவில்லை. இதனால் 18 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 105 ரன்களுக்கு சுருண்டது.

மும்பை தரப்பில் சாய்கா இஷாக், இசி வாங், ஹெய்லி மேத்யுஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீரங்கனை யாஸ்டிக பாட்டியா 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் ஹேலே மேத்திவ் 32 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் அளித்தனர். இறுதியில் மும்பை அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

First published:

Tags: Delhi Capitals, Mumbai Indians, Sports