முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : பரபரப்பான ஆட்டத்தில் ஆர்.சி.பி.யை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

மகளிர் ஐபிஎல் : பரபரப்பான ஆட்டத்தில் ஆர்.சி.பி.யை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

டெல்லியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மேரிசன் கேப் - ஜெஸ் ஜோனசன்

டெல்லியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மேரிசன் கேப் - ஜெஸ் ஜோனசன்

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை டெல்லி அணிக்கு ஏற்பட்டது. முதல் 2 பந்துகளில் தலா 1 ரன் எடுக்கப்பட்டபோது, 3 ஆவது பந்தை ஜோனசன் சிக்சருக்கு அனுப்பினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் அற்புதமாக விளையாடிய டெல்லி வீராங்கனைகள் அணியை வெற்றி பெற வைத்தனர்.  முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மந்தனா 15 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சோபி டெவின் 21 ரன்னில் வெளியேறினார். மற்றொரு ஆட்டக்காரர் ஹீதர் நைட் 11 ரன்னில் வெளியேற, பெங்களூரு அணி 12.4 ஓவரில்  3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

எலிஸ் பெர்ரியுடன் இணைந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 16 பந்துகளில் ரிச்சா கோஷ் 3 சிக்சர் 3 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்தார். எலிஸ் பெர்ரி 52 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆர்.சி.பி. அணி 150  ரன்களை சேர்த்தது. இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷெபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு ஓபனர் மெக் லேனிங் 15 ரன்னில் வெளியேறினார். இதன்பின்னர் மிடில் ஆர்டர் பேட்டர்கள் ஆலிஸ் கேப்சி 38, ஜெமிமா ரோட்ரிகஸ், மேரிசன் கேப் தலா 32 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜெஸ் ஜோனசன் 15 பந்தில் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை டெல்லி அணிக்கு ஏற்பட்டது. முதல் 2 பந்துகளில் தலா 1 ரன் எடுக்கப்பட்டபோது, 3 ஆவது பந்தை ஜோனசன் சிக்சருக்கு அனுப்பினார். 4 ஆவது பந்தில் அவர் பவுண்டரி அடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்து டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

First published:

Tags: Cricket