முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL Auction : மகளிர் ஐபில் தொடர்… 5 அணிகளில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் பட்டியல்

WPL Auction : மகளிர் ஐபில் தொடர்… 5 அணிகளில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் பட்டியல்

டபிள்யூ.பி.எல். அணிகளின் முக்கிய வீராங்கனைகள்...

டபிள்யூ.பி.எல். அணிகளின் முக்கிய வீராங்கனைகள்...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என 5 அணிகள் பங்கேற்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் என அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல் தொடருக்கான ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா ரூ. 3.40 கோடி என்ற மிக அதிகமான தொகைக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் ரூ. 3.20 கோடிக்கு குஜராத் அணியாலும், இங்கிலாந்தின் நேட் சீவர் அதே தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியாலும் வாங்கப்பட்டனர். முதல் மகளிர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என 5 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனைகள் அணி வாரியான விபரம்-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஸ்மிருதி மந்தனா, சோஃபி டெவின், எலிஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், திஷா கசட், இந்திராணி ராய், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஹீதர் நைட், டேன் வான் நீகெர்க், போயீதி போஹெம்னர், கோமல் சன்சாத், மேகன் ஷட், சஹானா பவார்

மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர், நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், யாஸ்திகா பாட்டியா, ஹீதர் கிரஹாம், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், தாரா குஜ்ஜர், ஷைகா இஷாக், ஹேலி மேத்யூஸ், க்ளோ ட்ரையோன், ஹுமைரா காசி, பிரியங்கா பாலா, சோனம் ஜிந்திமணி கலிதா, நீலம் பிஷ்ட்

குஜராத் ஜெயண்ட்ஸ்: ஆஷ்லீக் கார்ட்னர், பெத் மூனி, சோபியா டன்க்லி, அனாபெல் சதர்லேண்ட், ஹர்லீன் தியோல், டியான்ட்ரா டாட்டின், சினே ராணா, எஸ் மேகனா, ஜார்ஜியா வேர்ஹாம், மான்சி ஜோஷி, டி ஹேமலதா, தனுஜா கன்வர், மோனிகா படேல், சுஷ்மா வர்மா, ஹர்லி குமாரிலா, , பருணிகா சிசோடியா, ஷப்னம் எம்.டி

யு.பி. வாரியர்ஸ்: சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மா, தஹ்லியா மெக்ராத், ஷப்னிம் இஸ்மாயில், அலிசா ஹீலி, அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட், பார்ஷவி சோப்ரா, ஸ்வேதா செஹ்ராவத், எஸ் யஷஸ்ரீ, கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், லா ஷாவ்த்யா, லா சிம்ரீகா வைத்யா, லா சிம்யூரேகா வைத்யா

டெல்லி கேபிடல்ஸ்: ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெக் லானிங், ஷஃபாலி வர்மா, ராதா யாதவ், ஷிகா பாண்டே, மரிசானே கப், டைட்டாஸ் சாது, ஆலிஸ் கேப்ஸி, தாரா நோரிஸ், லாரா ஹாரிஸ், ஜாசியா அக்தர், மின்னு மணி, தனியா பாட்டியா, ஜெஸ் ஜோனாம் தீப்தி, ஸ்னேயாம் தீப்தி, அருந்ததி ரெட்டி, அபர்ணா மோண்டல்

First published:

Tags: Cricket