முகப்பு /செய்தி /விளையாட்டு / ரூ.3.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனை… யார் இந்த ஸ்மிருதி மந்தனா?

ரூ.3.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனை… யார் இந்த ஸ்மிருதி மந்தனா?

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. இவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. 26 வயதாகும் இடது கை ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா, இந்திய அணிக்காக கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பெரும்பாலான போட்டிகளில் ஸ்மிருதி வெளிப்படுத்தி வருவதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பெருகியுள்ளனர்.  77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,073 ரன்களும், 105 டி20 போட்டிகளில் விளையாடி 2,545 ரன்களையும் இவர் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 46.42 ரன்கள் சராசரியாகவும், டி20 போட்டிகளில் 27.66 ரன்கள் சராசரியாகவும் உள்ளன. ஸ்மிருதி மந்தனாவின் நீண்ட கால விளையாட்டு அனுபவம், உலகின் பல்வேறு சிறந்த மைதானங்களில் விளையாடியது, தொடர்ச்சியான ரன் குவிப்பு, சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ஆட்டம் உள்ளிட்டவை காரணமாக அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. டபிள்யூ.பிஎல். ஏலம் தொடங்குவதற்கு முன்பாகவே, ஸ்மிருதி மந்தனாதான் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என்று ஆகாஷ் சோப்ரா உள்பட பல்வேறு கிரிக்கெட் நிபுணர்கள் கணித்திருந்தனர்.

அதன்படியே ஏலத்தில் ரூ. 3.40 கோடிக்கு எடுக்கப்பட்டு ஸ்மிருதி மந்தனா ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக அவரே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தவிர்த்து ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீக் கார்ட்னரை ரூ. 3.20 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கும்,  இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லஸ்டோனை ரூ. 1.80 கோடிக்கு யு.பி. வாரியர்ஸ் அணியும், ஆஸ்திரேலிய வீராங்கனை எலீஸ் பெரியை ரூ. 1.70 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன.

First published:

Tags: Cricket