முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL Auction 2023 Live Updates: மிக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனை இவர்தான்…

WPL Auction 2023 Live Updates: மிக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கனை இவர்தான்…

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டபிள்யூ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் மிக அதிகமான தொகைக்கு இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. முக்கிய வீராங்கனைகள் சிலரை அந்த அணி ஏலத்தில் எடுத்திருப்பதால் அதன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆர்.சி.பி. அணி தொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. நடப்பாண்டு முதல் மகளிருக்கான டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மிக அதிகமான தொகைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஓர் அணி வீராங்கனைகளை ஏலத்தில் எடுப்பதற்கு அதிகபட்சமாக ரூ. 10 கோடி மட்டுமே செலவழிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், மிக அதிகமான தொகையை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

26 வயதாகும் ஸ்மிருதி மந்தனா மும்பையை சேர்ந்தவர். இடது கை ஆட்டக்காரரான இவர், அர்ஜுனா விருதை பெற்றிருக்கிறார். இந்திய அணிக்காக 2013-ஆம் ஆண்டில் இருந்து ஸ்மிருதி மந்தனா விளையாடி வருகிறார். 77 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,073 ரன்களும், 105 டி20 போட்டிகளில் விளையாடி 2,545 ரன்களையும் இவர் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 46.42 ரன்கள் சராசரியாகவும், டி20 போட்டிகளில் 27.66 ரன்கள் சராசரியாகவும் உள்ளனர்.

First published:

Tags: Cricket