முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘விரும்பியபடி விளையாட மும்பை அணி முழு சுதந்திரம் கொடுத்தது’ – ஹேலி மேத்யூஸ் பேட்டி

‘விரும்பியபடி விளையாட மும்பை அணி முழு சுதந்திரம் கொடுத்தது’ – ஹேலி மேத்யூஸ் பேட்டி

ஹேலி மேத்யூஸ்

ஹேலி மேத்யூஸ்

நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 38 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விரும்பியபடி விளையாட மும்பை அணிமுழு சுதந்திரம் கொடுத்ததாக அந்த அணியின் அதிரடி பேட்டர் ஹேலி மேத்யூஸ் கூறியுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ரன்களை குவித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஹேலி பெற்ற நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டிகளும் பரபரப்புடன் அமைவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வெறறிகளுக்கு பார்படாஸை சேர்ந்த 24 வயதாகும் ஹேலி மேத்யூஸ் முக்கிய காரணமாக உள்ளார். குஜராத் அணிக்கு எதிராக நடந்த தொடக்க போட்டியில் ஹேலி 31 பந்தில் 47 ரன்களை எடுத்தார். நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 38 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். இந்த போட்டியில் 156 ரன்களை மும்பை அணி எளிதாக சேஸ் செய்தது. வெற்றிக்கு பின்னர் ஹேலி மேத்யூஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஆல் ரவுண்டர் பிரிவில் என்னை அணியில் எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த போட்டியில் பந்து வீச பல வீராங்கனைகள் இருந்தனர். நான் பந்து வீசுவதற்கு அவசியமே இல்லை. இருப்பினும் எனக்கு வாய்ப்பு அளித்தார்கள். நான் விரும்பியபடி விளையாட மும்பை இந்தியன்ஸ் அணி முழு சுதந்திரம் அளிக்கிறது. இதனால் எனக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. எனவே, எதிர்பார்ப்புக்கும் அதிகமாக விளையாடுவதற்கு நான் முயற்சி எடுப்பேன். வெஸ்ட் இண்டீசில் கடந்த சில வாரங்களாக பெரிய ஸ்கோரை நாங்கள் சேஸ் செய்திருக்கிறோம். அந்த ஆட்டம் மகளிர் ஐபிஎல் தொடரில் எனக்கு உதவியாக இருக்கிறது. இதனால் எங்களால் 180 ரன்கள் வரையில் எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: WIPL