முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL : உ.பி. வாரியர்ஸ் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ்…

WPL : உ.பி. வாரியர்ஸ் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ்…

டெல்லி கேபிடல்ஸ் அணி

டெல்லி கேபிடல்ஸ் அணி

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தஹிலா மெக்ராத் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றுள்ளது. 212 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய உ.பி. வாரியர்ஸ் அணியில் தஹிலா மெக்ராத் 50 பந்துகளில் 90 ரன்கள் குவித்து கவனம் பெற்றார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 42 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

ஷபாலி வர்மா 17, மேரிசன் கேப் 16, ஆலிஸ் கேப்சி 21 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவர்களில் ஜெமிமா ரோட்ரிகஸ் – ஜேனசன் இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. ஜெமிமா 22 பந்தில் 34 ரன்னும், ஜோனசன் 20 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கை உ.பி. வாரியர்ஸ் அணி களத்தில் இறங்கியது.

கேப்டன் அலிசா ஹீலி 17 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்வேதா ஷெராவத் 1 ரன்னிலும், கிரன் நேவ்கிர் 2 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தஹிலா மெக்ராத் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, சிம்ரன் ஷேக் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். 50 பந்துகளை எதிர்கொண்ட தஹிலா 4 சிக்சர் 11 பவுண்டரியுடன் 90ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். தீப்தி சர்மா 12 ரன்னும், தேவிகா வைத்யா 23 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த வாரியர்ஸ் அணியால் 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 2 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

First published:

Tags: WIPL