முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL : பெங்களூரு அணிக்கு 3- ஆவது தோல்வி… குஜராத் ஜெயன்ட்ஸிடம் 11 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

WPL : பெங்களூரு அணிக்கு 3- ஆவது தோல்வி… குஜராத் ஜெயன்ட்ஸிடம் 11 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

ஆர்.சி.பி. விக்கெட்டை சாய்த்த உற்சாகத்தில் குஜராத் அணி.

ஆர்.சி.பி. விக்கெட்டை சாய்த்த உற்சாகத்தில் குஜராத் அணி.

பெங்களூரு அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 3 ஆவது தோல்வியை இன்று சந்தித்துள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஸ்னே ரானா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீராங்கனை சபினேனி மேகனா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த சோபியா டுங்ளே, ஹர்லீன் தியோல் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது.

டுங்ளே 18 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தியோல் 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்தவர்களில் ஆஸ்லே கார்டனர் 19 ரன்களும், ஹேமலதா 16 ரன்களும், சதர்லேண்டு 14 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 201 ரன்கள் குவித்தது. இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 18 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டேவின் 45 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். எலிஸ் பெர்ரி 32 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 10 ரன்களும் எடுத்தனர். கடைசி வரை களத்தில் நின்ற ஹீதர் நைட் 11 பந்தில் அதிரடியாக 30 ரன்கள் குவித்து பெங்களூரு அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியால் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியை தழுவியது. பெங்களூரு அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

First published:

Tags: WIPL