டி20 போட்டிகளில் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை- ரமீஸ் ராஜா

ஆப்கான் அதிரடி வீரர் சசாய்.

பாகிஸ்தான் அணியை டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பாகிஸ்தான் அணியை டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

  பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டித் தொடரில் ஆப்கான் வீரர்கள் ஹஸ்ரத்துல்லா சஸாய், நஜ்புல்லா சத்ரான், ரஷீத் கான் போன்றோரின் ஆட்டத்தை ரமீஸ் ராஜா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

  பாகிஸ்தான் சூப்பர் லீக் 2021 தொடரில் வெற்றி பெற்ற பெஷாவர் சலாமி அணியின் ஆட்ட நாயகனாக சசாய் தேர்வு செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் அணியை சலாமி அணி தோற்கடித்தது. இதன் மூலம் பெஷாவர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முல்டான் சுல்தான்ஸ் அணியுடன் இறுதியில் மோதுகிறது பெஷாவர் சலாமி அணி.

  இந்நிலையில் ரமீஸ் ராஜா கூறியதாவது:

  பாகிஸ்தான் ரசிகர்கள் சசாய் பேட்டிங்கை அவ்வளவாகப் பார்த்ததில்லை. இவரைப் போன்ற வீரர்கள் சிலர் ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கின்றனர். தோற்றுப் போன இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் 3 வீரர்கள் தற்போதைய பாகிஸ்தான் அணியில் இருப்பவர்கள்.

  இவர்களில் ஷதாப் கான் உட்பட அனைவரும் சசாய்க்கு பந்து வீசினர். ஷதாப் கான் பாகிஸ்தான் டி20 அணியின் துணைக் கேப்டன். ஆனால் இவர்களில் யாரும் சசாயை க் கட்டுப்படுத்த முடியவில்லை. தாக்கம் கூட ஏற்படுத்த முடியவில்லை. அவரிடம் ஒரு பக்குவப்படாத ஒரு ஆக்ரோஷத் திறன் உள்ளது. சசாயின் பொறுமை வலுவானது.

  இத்தகைய அணுகுமுறைதான் ஆப்கானிஸ்தானை ஒரு அபாயகர அணியாக மாற்றும். ஆகவே பாகிஸ்தானுக்கு எதிராக 2 டி20 போட்டிகள் நடந்தால் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வீழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரஷீத் கான் உள்ளிட்ட ஸ்பின் திறமையும் அபரிமிதமாக உள்ளது. பேட்டிங்கில் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றனர், ஆனால் ஹஸ்ரத்துல்லா சசாய் இப்படி பேட்டிங் செய்தாரென்றால் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

  பாகிஸ்தானுக்கு அபாயமணி கேட்டிருக்க வேண்டும். சசாய் போன்ற ஒரு வீரரை ஏன் உருவாக்க முடியவில்லை என்பதை பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும். பாகிஸ்தான் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும்.

  இவ்வாறு கூறினார் ரமீஸ் ராஜா.
  Published by:Muthukumar
  First published: