• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உலகக்கோப்பையில் பாகிஸ்தானை மீண்டும் ஒரு முறை வீழ்த்த வேண்டிய நேரம் இது: சச்சின் ஆவேசம்!

உலகக்கோப்பையில் பாகிஸ்தானை மீண்டும் ஒரு முறை வீழ்த்த வேண்டிய நேரம் இது: சச்சின் ஆவேசம்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர். (Reuters)

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர். (Reuters)

Time To Beat Them Again in #WorldCup2019: #SachinTendulkar | சச்சின் டெண்டுல்கரின் ட்வீட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #INDvPAK

  • News18
  • Last Updated :
  • Share this:
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை மீண்டும் ஒரு முறை வீழ்த்த வேண்டிய நேரம் இது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால், பாகிஸ்தானுடன் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விதமான தொடர்புகளையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெளிவான முடிவு ஏதும் பிசிசிஐ தரப்பில் எடுக்கப்படவில்லை. மத்திய அரசின் முடிவே இறுதியானது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    BCCI, PCB, ICC, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (AFP)


    இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை மீண்டும் ஒரு முறை வீழ்த்த வேண்டிய நேரம் இது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தனை எப்போது இந்தியா வீழ்த்தியுள்ளது. அவர்களை மீண்டும் தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்து அவர்களுக்கு எளிதாக 2 புள்ளிகள் வழங்குவதை தனிப்பட்ட முறையில் வெறுக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

    Sachin Tendulkar, சச்சின் டெண்டுல்கர்
    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். (File)


    மேலும், “எப்போதும் இந்திய நாட்டிற்கே முன்னுரிமை. எனவே எனது நாடு என்ன முடிவு எடுக்குகிறதோ, அதை முழு மனதுடன் நான் ஏற்கிறேன்,” என்று சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    சச்சின் டெண்டுல்கரின் ட்வீட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    2019 ஐ.பி.எல் போட்டிக்கான தொடக்க விழா ரத்து: திடீர் அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: