மான்கட் அவுட்டைவிட மோசமானது இந்த அவுட்.. நீங்களே வீடியோவை பாருங்க!

'Worse than #Mankading' Twitter slams #BenFoakes after controversial #stumping | ஐ.பி.எல் போட்டியில் அஸ்வின் மான்கட் அவுட் செய்த விவகாரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளனாது.

மான்கட் அவுட்டைவிட மோசமானது இந்த அவுட்.. நீங்களே வீடியோவை பாருங்க!
பென் ஃபோக்ஸ் செய்த சர்ச்சையான ஸ்டம்பிங்.
  • News18
  • Last Updated: May 4, 2019, 7:04 PM IST
  • Share this:
அஸ்வின் செய்த மான்கட் அவுட்டைவிட மோசமான அவுட், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் செய்த ஸ்டம்பிங்தான் என கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அயர்லாந்தின் டப்லினில் நகரில் இங்கிலாந்து - அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய ஒரேயொரு ஒரு நாள் போட்டி நடைபெற்றது. போட்டி நடந்த மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக ‘டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால், போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 43.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியின் பேட்டிங்கின்போது ஆன்டி பால்பிரினியை, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் ஸ்டம்பிங் அவுட் செய்தார். அதில், கிரீஸுக்குள் இருந்த பால்பிரினி தனது காலை தரையில் இருந்து மேலே தூக்கும்வரை காத்திருந்து ஃபோக்ஸ் ஸ்டம்பிங் அவுட் செய்தார்.பென் ஃபோக்ஸ் ஸ்டம்பிங் அவுட், அஸ்வின் செய்த மான்கட் அவுட்டைவிட மோசமானது என கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது ஃபோக்ஸின் அறிமுகப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Heres stumping pics Poms saying its smart glove work not against spirit of the game this time .why this double standards for ur own country players. I hope @jimmy9 will shred ben foakes pic to show his displeasure and @Colly622 will tweet about mother cricket and karma🤔#ENGvIRE pic.twitter.com/D3j4tGstW7VIDEO | வைரலாகும் சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடிய பாடல்!

ஆர்.சி.பி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கோலி, டி வில்லியர்ஸ்!

அப்ரிடி ஒரு கோமாளி.. மனநலம் பாதிக்கப்பட்டவர்... கம்பீர் பதிலடி!

உலகக்கோப்பையை விட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது.. வெளிநாட்டு வீரர் புகழாரம்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading