முகப்பு /செய்தி /விளையாட்டு / WC Women’s T20 : பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி…

WC Women’s T20 : பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி…

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி

19 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் 18 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இரு அணிகளும் தலா 20 ஓவர்களை நிறைவு செய்த நிலையில், இந்தப் போட்டி டி20 ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. பாரி போலந்து பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஹேலி மேத்யூஸ், விக்கெட் கீப்பர் ரஷதா வில்லியம்ஸ் களத்தில் இறங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஹேலி 20 ரன்னிலும், ரஷதா 30 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேம்ப்பெல் 22 ரன்கள் சேர்த்தார். சினெல் ஹென்றி 11, ஷபிகா கஜ்னபி 13, ஆலியா ஆலன் 9 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 116 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸதான் அணி களத்தில் இறங்கியது. அந்த அணியின் ஓபனர்கள் முனீபா அலி 5 ரன்னிலும், சித்ரா அமீன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் பிஸ்மா மாரூப் மற்றும் நிதா தார் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. மாரூப் 26 ரன்னும், நிதா 27 ரன்னும் எடுக்கஅடுத்து வந்த அலியா ரியாஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட முயன்ற பாகிஸ்தான் அணியின் வியூகம் பலிக்காமல் போனது. 19 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் 18 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், முதல் பந்தில் சனா 4 ரன்னும், அடுத்த பந்தில் சிங்கிளும் எடுத்தார். 3 மற்றும் 4ஆவது பந்தில் ஆலியா ரியாஸ் 2 பவுண்டரிகள் அடிக்க, அடுத்த பந்தில் போல்டாகி வெளியேறினார். கடைசி பந்தில் பாகிஸ்தான் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வி அடைந்தது.

First published:

Tags: Cricket