மகளிருக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் ஆகியோர் கடுமையாக போராடிய நிலையில் வெற்றி கைநழுவியுள்ளது. மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நட் சிவர் ப்ரூன்ட் 50 ரன்களும், விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் 40 ரன்களும் எடுத்தனர். அற்புதமாக பந்து வீசிய இந்திய அணியின் ரேணுகா கோஷ் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் வீராங்கனைகள் களத்தில் இறங்கினர். இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 1 சிக்சரும் 7 பவுண்டரிகளும் அடங்கும். ஷஃபாலி வர்மா 8 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 13 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 34 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழநது 140 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குரூப் பி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 –யில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீசையும், நியூசிலாந்து இலங்கை அணியையும் எதிர்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket