#SLvSA | இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு!

ICC World Cup 2019 | Srilanka vs South Africa | வரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்

Web Desk | news18
Updated: June 28, 2019, 2:40 PM IST
#SLvSA | இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு!
SLvSA
Web Desk | news18
Updated: June 28, 2019, 2:40 PM IST
இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் களைகட்டி வருகின்றன. இன்று நடைபெறவுள்ள 35 வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாப்ரிக்க அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது.

இலங்கை அணியை பொருத்தவரை ஆறு போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. இனி வரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றனர்.


இலங்கை அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் மஞ்சள் நிற ஜெர்ஸி அனிந்து விளையாடியதால் ராசியாக உள்ளது என கருதி இனி வரக்கூடிய போட்டிகளில் அதே ஜெர்ஸியை அனிந்து விளையாட ஐ.சி.சி.யிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.

தென்னாப்ரிக்க அணியை பொருத்தவரை ஏழு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்று அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது. எனவே இன்று நடைபெறவுள்ள போட்டி தென்னாப்ரிக்க அணிக்கு சம்பிரதாய போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

Also watch

Loading...

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...