உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா?

India vs West Indies Test | மேற்கிந்திய தீவுகள் அணியும் சாதரணமாக சொல்ல முடியாது. சொந்த மைதானம் என்பது அந்த அணி சாதகமாக உள்ளது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா?
கோப்பு படம்
  • Share this:
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பின்யன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. டெஸ்ட் சாம்பின்ஷிப் தொடரில் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டியின் முடிவுகள் முக்கியமானவை என்பதால் இந்திய அணி தீவிர பயிற்சியில் உள்ளது.

இந்திய அணியில் பேட்டிங் வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் விராட் கோலி, புஜாரா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் என அனைவரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். பவுலிங்கிலும் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, ஆல்-ரவுண்டர் அஸ்வின், ஜடேஜா என பெரிய பட்டாளமே உள்ளது.


மேற்கிந்திய தீவுகள் அணியும் சாதரணமாக சொல்ல முடியாது. சொந்த மைதானம் என்பது அந்த அணி சாதகமாக உள்ளது. டி20, ஒரு நாள் தொடர்களில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களது ஆட்டமும் இருக்க வாய்ப்புள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் கேப்டன்ஹோல்டர், கெமர் ரோச், கேப்ரியல் வேகப்பநது வீச்சில் மிரட்ட வாய்ப்புள்ளது. அந்த அணியின் இளம் வீரர்கள் ஹோப், ஜான் கேம்பல், ஷிம்ரன் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். ஆல்ரவண்டர் பிராவோ அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்.

Also Watch

Loading...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com