முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? தற்போது இருக்கும் வாய்ப்புகள் என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? தற்போது இருக்கும் வாய்ப்புகள் என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

2 ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் எந்த 2 அணிகள் அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ளதோ, அந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் தேதி முதல் 11 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. 2 ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் எந்த 2 அணிகள் அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ளதோ, அந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறுவதற்கான 3 வாய்ப்புகளைப் பார்க்கலாம்- 1. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4 ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். நியூசிலாந்து – இலங்கை டெஸ்ட் போட்டிகளின் ரிசல்ட்டிற்காக காத்திருக்க தேவையில்லை.

ஒருவேளை கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் இலங்கை இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 3. அகமதாபாத் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்து விடும். இந்த சூழலில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

First published:

Tags: Cricket