ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்… 2ஆம் இடத்தில் நீடிக்கும் இந்திய அணி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்… 2ஆம் இடத்தில் நீடிக்கும் இந்திய அணி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் இழந்துள்ளதால் அந்த அணி பின்னுக்கு சென்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணி 2ஆம் இடத்தில் நீடிப்பதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இந்த போட்டியை ஐசிசி நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2021- இல் நடந்த டெஸ்ட் உலக கோப்பை இறுதி போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் பின்னர் அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், எந்த 2 அணிகள் அதிகமான வெற்றி சதவீதத்தை பெற்று இருக்கிறதோ, அந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் இழந்துள்ளதால் அந்த அணி பின்னுக்கு சென்றுள்ளது. இன்று நடந்த பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தரவரிசை பட்டியல் அப்டேட் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி தொடர்ந்து 2ஆம் இடத்தில் நீடிக்கிறது.

78.57 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 58.93 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி 2ஆம் இடதை பிடித்துள்ளது. 3ஆம் இடத்தில் 53.33 சதவீதத்துடன் இலங்கை அணியும், 50 வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 4ஆம் இடத்திலும் உள்ளன.

ரிஷப் பந்த் உடல்நிலை குறித்து தாயாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி…

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நினைவுகள் 2022 : அதிர்ச்சி கொடுத்த சைமன்ஸ் மரணம்.. தாமஸ் கோப்பை வென்று அசத்திய இந்தியா - மே மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டிக்கு பின்னர் அப்டேட் செய்யப்பட்ட பட்டியல் இதுவாகும். இதன் அடிப்படையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசம் அடைந்துள்ளன.

First published:

Tags: Australia, India