இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருப்பது, உலக டெஸ்ட் சாம்பியன் தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் மூலம் உலக கோப்பை டெஸ்ட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற, வாய்ப்புகள் சற்று அதிகரித்துள்ளன.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இந்த போட்டியை ஐசிசி நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2021- இல் நடந்த டெஸ்ட் உலக கோப்பை இறுதி போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் பின்னர் அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், எந்த 2 அணிகள் அதிகமான வெற்றி சதவீதத்தை பெற்று இருக்கிறதோ, அந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும் 2ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும், 3ஆம் இடத்தில் இலங்கையும், 4வது இடத்தில் இந்தியாவும், 5ஆவது இடத்தில் இங்கிலாந்தும், 6ஆவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.
மூல்தான் டெஸ்ட் போட்டி.. பாகிஸ்தானை 26 ரன்களில் வென்று தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து…
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் இழந்துள்ளதால் அந்த அணி பின்னுக்கு சென்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியின் ஃபைனலுக்கு தகுதிபெற, இந்தியா வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இதேபோன்று உள்ளூரில் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்க கூடாது என்ற கட்டாயம் இருந்தது.
ஆனால் அந்த நிலைமை தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருப்பதால் மாறியுள்ளது. அதாவது பாகிஸ்தானின் தோல்வியால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்தியா உலக கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுவிடும்.
ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது ஜாஸ் பட்லருக்கு அறிவிப்பு…
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இந்த தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி விட்டால் டெஸ்ட் உலகக்கோப்பை ஃபைனலுக்கு செல்ல இந்தியாவுக்கான வாய்ப்புகள் எளிதாக அமைந்துவிடும். தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Pakistan