Home /News /sports /

ரஞ்சி அறிமுகப் போட்டியில் முச்சதம்- பீகாரிலிருந்து ஓர் உலக சாதனை- சகிபுல் கனி யார்? சச்சின் வாழ்த்து

ரஞ்சி அறிமுகப் போட்டியில் முச்சதம்- பீகாரிலிருந்து ஓர் உலக சாதனை- சகிபுல் கனி யார்? சச்சின் வாழ்த்து

வரலாறு படைத்த பீகார் கிரிக்கெட் வீரர் முகமது கனி - 341 ரன்கள்.

வரலாறு படைத்த பீகார் கிரிக்கெட் வீரர் முகமது கனி - 341 ரன்கள்.

முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியில் பீகார் -மிசோராம் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பீகார் அணி வீரர் சகிபுல் கனி சிறப்பாக விளையாடி முச்சதம் அடித்து சாதனை படைத்தார். இவருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியில் பீகார் -மிசோராம் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பீகார் அணி வீரர் சகிபுல் கனி சிறப்பாக விளையாடி முச்சதம் அடித்து சாதனை படைத்தார். இவருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சகிபுல் கனி. தொடர்ந்து விளையாடிய அவர் 405 பந்துகளில் 56 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 341 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில் சகிபுல் கனியில் திறமையான ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டினார். "சகிபுல் கனி தனது முதல் ரஞ்சி டிராபி போட்டியில் திடமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள். தொடருங்கள்" என்று டெண்டுல்கர் டுவீட் செய்துள்ளார்.


    யார் இந்த சகிபுல் கனி:

    பீகார் மாநிலத்தின் தூங்கி வழியும் மொதிஹாரி டவுனைச் சேர்ந்தவர்தான் இந்த சகிபுல் கனி, இவர் முச்சதம் அடித்து தூங்கி வழியும் தன் ஊரையே தட்டி எழுப்பியுள்ளார். முதல் தர கிரிக்கெட் அறிமுகத்திலேயே முச்சதம் விளாசி தன் பெயரை வரலாற்றின் பொன் எழுத்துக்களில் வார்த்துள்ளார் சகிபுல் கனி.

    405 பந்துகளில் 56 பவுண்டரி 2 சிக்சருடன் 341 ரன்கள் விளாசியுள்ளார். இதற்கு முன்னால் மத்தியப் பிரதேசத்தின் அஜய் ரொஹீரா 2018-ல் ஹைதரபாத்துக்கு எதிராக 267 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    இவரது குடும்பத்தின் 6 வாரிசுகளின் கடைசி வாரிசுதான் சகிபுல் கனி, இவரது தாயார் அஸ்மா கதூன் இவருக்கு 3 மட்டைகளை இந்தப் போட்டிக்கு முன்பாக பரிசாக வழங்கினார். பீகாரில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு வசதிகளே இல்லாத நிலையில் இவர் இந்தச் சாதனையைப் படைத்தது பெரிய வியப்புக்குரியதாகும்.

    இவரது மூத்த சகோதரர் ஃபைசல் பீகாருக்கு ஆடியிருப்பார், ஆனால் அதற்குள் பீகாருக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. மொதிஹாரியில் அகர்வா என்ற பகுதியில் சகிபுல் கனி குடும்பம் வாழ்ந்து வருகிறது. இவரது தந்தை முகம்து மனன் கனி என்பவர் அங்கு விளையாட்டுப் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: Ranji 2022: 30 பந்துகளில் 140 ரன்கள்- தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான் ஆவேசம் -194 ரன்கள் குவிப்பு

    சகீப் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர், வேகப்பந்து வீச்சையும் வீசுவார், இவரது இன்னொரு சகோதரர் அஃபான் ஒரு ஸ்பின் ஆல்ரவுண்டர், குடும்பமே கிரிக்கெட் குடும்பம் என்றால் மிகையாகாது. சகிபுல் கனி மூலம் பீகாரின் தூங்கி வழியும் டவுன் ஆன மொதிஹாரி இப்போது கிரிக்கெட் மையமாக மாறவுள்ளது என்கிறார் சகிபுல் கனியின் கிரிக்கெட் சொந்த சகோதரன் ஃபைசல்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Bihar, Cricket, Ranji Trophy

    அடுத்த செய்தி