முகப்பு /செய்தி /விளையாட்டு / WC Women’s T20 : பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி

WC Women’s T20 : பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி

அரைச்சதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிகஸ்

அரைச்சதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிகஸ்

13.3 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்திருந்தது. ஜெமிமா ரோட்ரிகசுடன் இணைந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாரூப் பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி 12 ரன்களும், ஜவேரியா கான் 8 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மாரூப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். ஆயிஷா நசீம் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களத்தில் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் யஸ்திகா பாட்டியா 20 பந்தில் 17 ரன்னும், ஷஃபாலி வர்மா 25 பந்தில் 33 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 12 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 13.3 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின்னர் ஜெமிமா ரோட்ரிகசுடன் இணைந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனைத்து ஓவர்களிலும் இந்த இணை எளிதாக ரன்களை சேர்த்ததால் இந்திய அணி, சுலபமாக வெற்றி இலக்கை நெருங்கியது. 19 ஓவரின் முடிவில் இந்திய அணி 151 ரன்கள் எடுத்து, ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஜெமிமா ரோட்ரிகஸ் 53 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். வெற்றி பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

First published:

Tags: Cricket