உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஒப்பீட்டளவில் ஆஸ்திரேலியா வலிமையாக காணப்படும் நிலையில், அதனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி நுழையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
லீக் சுற்றின் முடிவில் குரூப் ஏ –யில் தென்னாப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் பி-யில் இந்தியாவும், இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் முதல் அரையிறுதிப் போட்டி கேப்டவுன் நகரில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 3மணிக்கும், தென்னாப்பிரிக்க நேரப்படி இந்த போட்டி மாலை 6.30-க்கும் தொடங்குகின்றன. லீக் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது. இந்திய அணி லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்திருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் 5 போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதற்கு முன்னதாக காமென் வெல்த் கிரிக்கெட் தொடரில் நடந்த 2 போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கெல்லாம் நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்திய மகளிர் அணி: ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், தேவிகா வைத்யா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங், ராதா யாதவ், ஹர்லீன் தியோல் அஞ்சலி சர்வானி, யாஸ்திகா பாட்டியா ஆஸ்திரேலியா மகளிர் அணி: பெத் மூனி(விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, மெக் லானிங்(கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன், அலிசா ஹீலி, ஹீதர் கிரஹாம், ஜெஸ் ஜோனாசென், கிம் கார்த்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket