முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை மகளிர் டி20 : அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி… ஆஸ்திரேலியாவுடன் மோத அதிக வாய்ப்பு…

உலகக்கோப்பை மகளிர் டி20 : அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி… ஆஸ்திரேலியாவுடன் மோத அதிக வாய்ப்பு…

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி

குரூப் பி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3-இல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இவை குருப் ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குரூப்பில் இடம்பெற்றுள்ள மற்ற அணியுடன் தலா 1 ஆட்டத்தில் மோதும். இதன்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாடியிருக்கும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

இன்று நடந்த போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. அந்த வகையில் குரூப் பி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3-இல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட் +0.253. இதே பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3லும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இதன் நெட் ரன் ரேட் +1.776. இதன் அடிப்படையில் அடுத்த போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தாலும், முதலிடத்தை தக்க வைத்துக்கொள்னும். அந்த வகையில் குரூப் பி-யில் 2ஆம் இடத்தில் உள்ள இந்தியா ஏ.-யில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியுடன் வரும் வியாழன் அன்று அரையிறுதிப் போட்டியில மோதுகிறது.

First published:

Tags: Cricket