முகப்பு /செய்தி /விளையாட்டு / WC Women’s T20 : வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

WC Women’s T20 : வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

இந்திய அணி

இந்திய அணி

பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 33 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 44 ரன்களும் எடுத்தனர். இந்த இணை 4 ஆவது விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் தீப்தி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.அந்த அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை டெய்லருடன் இணைந்த கேம்ப்பெல் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி 2 ஆவது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டெய்லர் 42 ரன்களும், கேம்ப்பெல் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவ்விரு விக்கெட்டுகளையும் இந்திய அணியின் தீப்தி சர்மா கைப்பற்றினார். அடுத்து வந்த ப்ளேயர்களில் செதான் நேஷன் 21 ரன்களும், ஷபிகா கஜ்னபி 15 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 28 ரன்கள் சேர்த்தார்.

பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 33 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 44 ரன்களும் எடுத்தனர். இந்த இணை 4 ஆவது விக்கெட்டிற்கு 72  ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 18.1 ஆவது ஓவரின்போது 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய தீப்தி சர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் குரூப் பி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

First published:

Tags: Cricket