ICC Cricket World Cup 2019 | பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சு தேர்வு!

#ICCWorldCup2019 | #ICCCricketWorldCup2019 | #PAKvWI | உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் 7 முறையும் பாகிஸ்தான் 3 முறையும் வென்றுள்ளன.

ICC Cricket World Cup 2019 | பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சு தேர்வு!
#PAKvWI
  • News18
  • Last Updated: May 31, 2019, 2:40 PM IST
  • Share this:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை லீக் சுற்றுகள்:

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.


ரவுண்ட் ராபின் முறையிலான லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

1992 உலகக் கோப்பைக்குப் பின் முதல் முறையாக ரவுண்ட்-ராபின் சுற்று மூலம் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இரு அணிகளின் வெற்றி - தோல்விஉலகக்கோப்பையை பொறுத்தவரை மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 10 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மேற்கிந்தியத் தீவுகள் 7 முறையும் பாகிஸ்தான் 3 முறையும் வென்றுள்ளன.



பாகிஸ்தான் அணியின் பலம்

பாகிஸ்தானுக்கு பேட்டிங்கில் கைகொடுக்க பாபர் அசாம், பஹார் ஜமான், இமாம் உல்ஹக் ஆகியோர் உள்ளனர். இதில் பாபர் அசாம் பயிற்சிப் போட்டியில் சதம் விளாசியுள்ளார். பந்து வீச்சில் எதிரணியை கலங்க வைக்க முகமது அமிர், வஹாப் ரியாஷ், ஷதப் கான், ஹாசன் அலி உள்ளனர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் பலம்

மேற்கிந்தியத் தீவுகளை பொறுத்தவரை கெய்ல், ரஸல், சாய் ஹோப் உள்ளிட்ட 6 வீரர்கள் பேட்டிங்கில் மிரட்ட வரிசை கட்டி காத்துள்ளனர். குறிப்பாக ஆண்ட்ரே ரஸல் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சியாட்டத்தில் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பந்துவீச்சும் கை கூடினால் அந்த அணியின் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது.

Also Read : Video | #ICCWorldCup2019 பிரமிக்கவைத்த ஒரு கேட்ச்... மைதானத்தையே அதிர வைத்த பென் ஸ்டோக்ஸ்...!

Also Read : உலகக்கோப்பையில் டேவிட் வார்னர் விளையாடுவாரா?

Also Watch

First published: May 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading