Home /News /sports /

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் : வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் : வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சு தேர்வு

SAvWI

SAvWI

தென்னாப்பிரிக்கா அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழத்தியது.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.

உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளன. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதுகின்றன.



இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழத்தியது. வெஸ்ட் அணிக்கு இதுவே முதல் பயிற்சி ஆட்டமாகும்.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. வங்கதேச அணிக்கு இது முதல் பயிற்சி ஆட்டம். பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோல்வியை சந்தித்தது.



இன்றைய பயிற்சி போட்டி பாகிஸ்தான் அணிக்கு கடும் சவாலாகவே இருக்கும். இந்த போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்க உள்ளது.

Also Read :இங்கிலாந்து மைதானத்திலேயே அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர்!

Also Read :பாகிஸ்தானிலும் கிங் ‘தல’ தோனி தான்! வைரலாகும் 7 நம்பர் ஜெர்சி

Also Read :அவரா இது? 8 வருடங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியாவின் உற்சாகக் கொண்டாட்டம்

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup, World cup cricket 2019

அடுத்த செய்தி