வைரல் வீடியோ: 99 ரன்னில் சிக்ஸ் அடித்து கெத்து காட்டிய தல தோனி! வாயைபிளந்த கோலி

அதிரடியாக விளையாடிய தோனி 78 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 113 ரன்கள் எடுத்தார். தோனி 99 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் விளாசி சதம் அடித்தார்.

வைரல் வீடியோ: 99 ரன்னில் சிக்ஸ் அடித்து கெத்து காட்டிய தல தோனி! வாயைபிளந்த கோலி
தோனி மற்றும் கோலி
  • News18
  • Last Updated: May 29, 2019, 4:48 PM IST
  • Share this:
வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து சதம் விளாசியதை பார்த்த கோலி உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்க உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதான பயிற்சி போட்டியில் அனைத்து அணிகளும் விளையாடி முடித்து உள்ளது. இந்தியா - வங்கதேசத்துக்கான பயிற்சி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தோனி 78 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 113 ரன்கள் எடுத்தார். தோனி 99 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் விளாசி சதம் அடித்தார்.



இதை பெவிலியனில் இருந்து பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உற்சாகத்தில் துள்ளிக் குதித்து கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Watch

First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading