உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து அணியை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டிஸ்!

WIvsNZ

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன வெஸ்ட்இண்டிஸ் அணி 50 ஓவர் போட்டியையும் டி20 போல் ஆடினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 421 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இன்று நடைப்பெற்ற பயிற்சி போட்டியில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டிஸ் அணியின் கெயில், லூவிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன வெஸ்ட்இண்டிஸ் அணி 50 ஓவர் போட்டியையும் டி20 போல் ஆடினர்.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை வெஸ்ட் அணியினர் நான்கு புறமும் சிதறவிட்டனர். நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்களால் அவர்களின் அதிரடியை எந்த விதத்திலும கட்டுபடுத்த முடியவில்லை. இறுதியாக வெஸ்ட் இண்டிஸ் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 421 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் ஹோப் 101 ரன்கள் குவித்தார். லூவிஸ், ரஷல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் பவுல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

Also Watch

Published by:Vijay R
First published: